உணர்வு

உணர்வு

செடிகள் உணர்வதில்லை
மொட்டுகள் வாசம் உள்ளதை

மரங்கள் உணர்வதில்லை
பழங்கள் சுவை உள்ளதை

மேகங்கள் உணர்வதில்லை
நீர்த்துளிகள் சுவை உள்ளதை

மாடுகள் உணர்வதில்லை
பால் கனம் என்பதை

யானைகள் உணர்வதில்லை
தந்தங்கள் கவனம் என்பதை

நத்தைகள் உணர்வதில்லை
சங்குகள் குணம் மிக்கதை

பாம்புகள் உணர்வதில்லை
சட்டைகள் தன்னை நெருங்கும் என்பதை

மனிதன் உணர்வதில்லை
சேட்டைகள் அவனை தாக்கும்
என்பதை

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (7-Jul-16, 5:58 am)
Tanglish : unarvu
பார்வை : 138

மேலே