தினம் ஒரு காதல் தாலாட்டு - ஜோடி பாடல் 50 - 159

“கரும்புத் தின்ன கூலிகேட்கும் இரும்பு உள்ளங்களே- இந்த
இருகிளிகள் இணைவதற்கு ஒரு வழி சொல்லுங்களேன் !”

“அரும்புவிட்ட நாள்முதலாய் இணை பிரிந்ததில்லை -இன்று
பிரிந்துவிட்ட காலம்தொட்டு வருத்தம் தாங்கவில்லை..!

ஜாதி என்ன மதம் என்ன எல்லாம் பொய்யுங்க – அதை
பிரித்து வைத்து பேசுறவங்க மடப்பசங்க

காதலிலே ஆணும் பெண்ணும் விளக்கு திரிங்க – அதை
பிரித்து அழ வெக்கிறது முறை இல்லீங்க

ஆடிக்காத்து அடிப்பதைப் பாத்து ஓடி ஒளிந்திடும்
வேடிக்கையான பிள்ளை இல்லை காதல் என்பது
அது கடைசிவரைப் போராடும் சக்தி கொண்டது !


நீதி நியாயம் பார்த்து காதல் வராது – அது
விதி வரைந்த கோட்டை மீறிப்போகாது

மூடி வைத்து கழுத்தறுத்தால் மோட்சம் கிட்டாது
நன்றாய் பாடுகின்ற கவிஞனனுக்கு வார்த்தை முட்டாது

ஆடிக்காத்து அடிப்பதைப் பாத்து ஓடி ஒளிந்திடும்
வேடிக்கையான பிள்ளை இல்லை காதல் என்பது
அது கடைசிவரைப் போராடும் சக்தி கொண்டது !

எழுதியவர் : சாய்மாறன் (9-Jul-16, 5:56 pm)
பார்வை : 123

மேலே