உங்கள் பதில் தான் என்ன

மரத்தை வெட்டி அதில் காகிதம் செய்து
அதன் மேல் மனிதன் எழுதுகிறான்:
"மரங்களை காப்போம்.!"
இது ஏன்?

மதுவிலக்குக்காக ஊரே சேர்ந்து
போராடிக்கொண்டு குமுறுகிறது,
ஓட்டுப்போடும் போது
காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போட்டது
இதே புத்திசாலிகள் தானே.!

பெற்றவர் கடமை கான்வென்ட்டிலிருந்து
காலேஜ் படிப்புவரை மட்டுமா,
பொறுப்புடன் ஒரு வேலை
தேடிக்கொடுக்கும் வரை.
84 லட்சம் என்ஜினீயர்களை உருவாக்கிவிட்டு
வேலைதேடும்படி வைத்து விட்ட
பெற்றோரே,
உங்கள் பதில் தான் என்ன..?

எழுதியவர் : செல்வமணி (9-Jul-16, 10:03 pm)
பார்வை : 101

மேலே