அதோ ஒரு தெரு ஓரமாக•••

உட்கார்ந்து ஊற்றுவதை வாக்கியபடி இருக்கிற கீழ் சாதி என பலராலும் பேசப்படும் ஒதுக்கி வைக்கப்படும் அந்த ஏழைத் தாயின் மகனுக்கும்!

கஞ்சியை கை தூக்கி ஊற்றுகிற அந்த உயர் சாதி என பேசப்படும் தாயின் மகளுக்கும் !

அல்லது உயர் சாதியர் மகனுக்கும் கீழ் சாதியர் மகனுக்கும் !

கல்யாணம் பண்ணிப் பார்த்தால் !

இந்த உயர் சாதியர் மகளின் கருவறை !

அந்த தாழ்ந்த சாதியர் மகனின் உயிரணுக்களை !

கருவுற மறுக்குமேயாயின் !

மேல்சாதி கீழ்சாதி என்னும் கூற்று நிஜமே !

பிரிந்த சாதியர் கட்டுப்பாடு கோடு போட்டு கட்டுப் படுவது போல் !

அச்சாதியர் கருவறையும் கட்டுப்படுமேயானால் !

அவர்கள் கொள்கையில்
பல வகையில் ஞாயம் இருக்கிறது !

அப்படி யாயிருக்கும் பட்சத்தில் ஏற்றேக் கொள்ள வேண்டும் !

கீழ் சாதியர் மேல்சாதியரை மதிக்கட்டும் !

மண்டியிட்டு வணங்கட்டும்!

அவர்கள் வரும் பாதையில் இருந்து அவர்கள் பாதையை கடக்கும் வரை ஒதுங்கி நிற்கட்டும் !

தோளில் போட்டிருக்கும் துண்டை எடுத்து அக்குளில் வைக்கட்டும் !

அதேசமயத்தில் அம்மேல் சாதிப்பெண் !

கர்ப்பவதியாகிவிட்டால் சாதி என்றாலே பேதி பிடுங்க ஓடட்டும்

அரசாங்கம் சாதி சான்றிதழ் தரும் முறைகளை ரத்து செய்திட வேண்டும் !

சாதி ஆண் பெண் இரண்டொழிய வேறில்லை
என்றே பகிரங்கமாக முழங்கட்டுமே !

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (10-Jul-16, 9:31 am)
பார்வை : 127

மேலே