தினம் ஒரு தத்துவ பாட்டு - 24 = 160

“பிழைப்புத்தேடி நகரம்நோக்கி வந்த ஜனங்களே
காவாங்கரையில் குடிசைபோட்டு குந்தும் ஜனங்களே
இதயமுள்ள நகரமிது பிறர் இன்னல்களை களையுது
இருண்டவர் வாழ்வுதன்னை ஏற்றம்பெற செய்யுது”

வானம்பாத்த பூமி சுத்த வறட்சி கண்டதாலே
பட்ணம்நோக்கி படையெடுத்த பாட்டாளி மாரே
பட்டிக்காட்டு வாழ்க்கைமுறை பட்டிணத்தில் போரு
பத்துரூபாய் இருந்தாலே பகட்டு வாழ்க்கை பாரு

கடலை மிட்டாய் விற்றாலும் காவலருக்கு
கமிஷன் கொடுக்க வேண்டும்
கமிஷனிலே கஞ்சத்தனம் காட்டுனாக்கா
கடைகள் கால்பூட்ஸ் உதைக்கு இலக்காகும்

என்ன தேசமிது ? எவன் தலையிலாவது
மிளகாய் அரைக்குது !
எதுத்து கேட்பவனை கன்னத்தில் அறையுது !


விஞ்ஞானம் வளர வளர
கலாச்சாரம் அழியுது
கலாச்சாரம் என்றப் பெயரில்
அபச்சார உடை அணியுது

விபச்சார மறுவாழ்வுக்கு
அச்சாரம் கொடுத்தாலும்
அச்சாரம் பெற்றுக்கொண்டு
மீண்டும் விபச்சாரம் செய்யுது

பெண்ணுரிமை பேனிய ஞானி
இன்றிருந்தால் விடுவான் ஏக்கத் தோணி
பெண்கள் என்றால் பெரிய ஏணி
எல்லாம் மேடை பேச்சோடுதான் வா நீ …!

கூவத்தில் குடியிருந்தால்
கொல்லை நோய் வருதுன்னு
நகர எல்லைக்குள் குடிவைத்தாலும்
மீண்டும் குடிசையமைத்து கூவத்தை நாரடிக்குது


முதலுக்கு மும்மடங்கு தருவதாய்
முதலீடை முழுசாய் முழுங்குது
மோசம்போன ஜனங்கள் தானாய்
போலீசும் கோர்ட்டுமா அலையுது

நாளெல்லாம் உழைத்த கூலி
டாஸ்மார்க் கடையில காலி
போராடும் பெண்கள் கழுத்தில்
தாலி மட்டும்தான் மீதி..!

தாலிக்குள் தங்கம் கோர்க்கும்
தங்கமான தேசம் – அதை
ஆடம்பர செலவுக்காக
அடகு வைப்பவன் மோசம்

இலவசத்தை நம்பினால்
இடியாப்ப சிக்கல்தான்
விலைவாசி ஏறுவதற்கு
இலவசமே கப்பம்தான்!

எழுதியவர் : சாய்மாறன் (10-Jul-16, 5:01 pm)
பார்வை : 140

மேலே