அழகிய தமிழ் மகள்
தாவணி உடுத்தி வந்து அவள் இடையில் தண்ணீர் குடத்தை அமர்த்தி தெம்மாங்கு ,
நடை நடந்து தெரு வீதியில் வரும் அழகே.......,,
எம் முன்னோர் படைப்புகள் கண் முன்னே தோன்றுதே...!!
காலை நேர நிலவொளியில், வாசல் வந்து நீர் தெளித்து, வண்ண கோலம்
வரைந்த அழகை கண்டு, உள்ளம் மகிழுதே ...........!
முகத்தில் மஞ்சள் பூசி ,முழு நிலவாய் பொட்டு வைத்து, பின்னி சடை அணிந்து ,
பிறை அளவில் பூ சூட்டி, பெற்றவள் போல், எம்மை பெருமை பட செய்தவளே .........!!
கையில் வளவி இட்டு, காலுக்கு தண்டை போட்டு, வண்ண பட்டுடுத்தி, வாய் நிறைய போன் சிரிப்பாம்.....
சிந்தும் சிரிப்பழகில், செவ்வானம் போல் ஒளிர்ந்து
செந்தேன் பொழிய, செப்பு சிலையன நின்றவளே ..............!!
கூறிய விழிகளாலே ஒரு பார்வை எம்மை நோக்கி கொடும் கோல்
ஆச்சி செய்ய, என் உள்ளத்தில் நுழைந்தவளே ...........!!
காதலை முன் மொழிய உனக்கு கவிதை படைத்து விட்டேன் .........
அழகிய தமிழ் மகளே அர்ப்பணி உன்னை என்னிடம் ஆட்கொண்டு விடுகிறேன்...........