உயிர் துடிப்பு•••

உங்கள் குழந்தைகள்
உங்கள் குழந்தைகள் அல்ல

அவர்கள் உங்களால்
வந்தவர்கள் அல்ல

உங்கள் வழியாக
வந்தவர்கள் ஆவார்கள்

உங்கள் அன்பை
அவர்களுக்கு கொடுங்கள்

உங்கள் எண்ணங்களை அல்ல

அவர்களின் எண்ணங்கள வேறு

உங்களால் அவற்றினை
தொடக்கூட முடியாது

இது ஒரு கவிஞரின் வடிவமைப்பு

உங்கள் மனைவியர்
உங்கள் மனைவியர் அல்ல

அவர்கள் உங்களால்
வந்தவர்கள் அல்ல

உங்களுக்காக
உருவாக்கப்பட்டவர்கள்

அவர்களுக்கு உங்கள்
மகிழ்ச்சியை பரிமாறுங்கள்

உங்கள் அதிகாரத்தை அல்ல

அவர்கள் உரிமையின்
பங்குதாரர்கள் ஆவார்கள்

அவர்கள் அடிமைகள் அல்ல
இது ஒரு சேவகியின்
உயிர் துடிப்பு•••!

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (11-Jul-16, 9:25 am)
பார்வை : 82

மேலே