பெண்ணாம் தியாகி

இவளல்லவோ தியாகி

சிறு வயதில்

அன்னைக்கு துணையாக

பணிவிடைகளைப் பக்குவமாய்

கற்றிடுவாள் தன்னை

நல்லதோர் மங்கையாய் ஆக்கிக்கொள்ள

மணமானப்பின் புகுந்த வீட்டில்

அடுக்களைப் பராமரிப்பு

மாமனார் மாமியார் பணிவிடைகள்

பின்னே பிள்ளைகள் பராமரிப்பு

இரவு வந்திட வீடு திரும்பிய

கணவனுக்கு பணிவிடைகள்

எல்லாம் முடிந்தபின்

அப்பாடா என்று

கண் துயில எத்தனிக்க

வந்து சேரும்

படுக்கை அறை பணிவிடைகள் !

தனக்கென்று வாழ தெரியாதவள்

தாயாம் தூய மங்கை அவள்

அன்றும் இன்றும் என்றும்

அவள் குடும்பத்திற்கோர்

வர ப்ரஸாதி

அன்று அவள் இல்லத்தில்

எல்லாம் இருந்தும்

ஒன்றும் காணா இல்லாள்

ஆண் வர்கத்தின் கொத்தடிமை


இன்று சுய கௌரவம்

மற்றும் சுதந்திரம்

சற்று பெற்று விட்டதாய்

அவள் எண்ணியபோதும்

அவள் அவளை நிலை

சிறிதேனும் மாறவில்லை


ஆம் அன்று

வீட்டோடு வீடாய்

இருந்தவள் இன்றோ

ஆணைப்போல் அலுவலகம் சென்று

சில போது அவனை விட

அதிக திரவியம்

கொண்டு தருகிறாள்

வீடு திரும்பிய பின்

அன்று போல் இன்றும்

பணிவிடைகள் கதை

தொடர்கிறது ........

இந்தப் பெண்ணை

தாயை என்னென்று கூறுவது

தியாகச் செம்மல் என்பேன்

ஆம் அவளுக்கு

தனக்காக சிறுதளவும்

வாழத் தெரியாது

இத்தகைய உயர்ந்த

பெண் இனத்தை

பூப்போல் தாங்காமல்

வீட்டிலும் வெளியிலும்

ஓயாமல் தொல்லைகள்

தரும் ஆண்கள் வீணர்களே

பெண்ணைப் போற்றுவோம்

பெண்மைக்கு அரணாய்

என்றும் இருப்போம்

பெண்ணெனும் சக்தியை

மதித்திடுவோம் வணங்கிடுவோம்

நாடுயர நாம் உயர

பெண்ணைப்போல் தியாகி

இப்புவியில் இல்லை என்பேன்

ஓம் சக்தி ஓம் சக்தி

---------------------------

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-16, 3:56 pm)
பார்வை : 103

மேலே