பரிகாரம்

பரிகாரம்

உதிக்கும்
சூரியனுக்கு
பக்கத்து வீடு
பற்றி எறிய .....

நேர்முக பேட்டி நடத்த
மறந்தும்
கடமை தவறா கரியன்
கை அசைக்க
சிந்தியதே புன் சிரிப்பு ..

ஈரெட்டு ஆண்டு
சர்வ கால சர்ப சண்டை
பரிகாரம்
கலச பூசைகள்
குருவாட்டம்
காலம் நகர்த்திவிட்டது .

கணக்கு வழக்கு
பார்த்ததில் குளருபடி
நட்டமோ இலாபமோ
விட்டுத்த ள்ளு
நல்ல வேளை
சொந்த வீடு
சுத்தமா இருக்கு இப்போது
பாபக் கிரகம்
பத்தாம் வீட்டில் பதுங்கி நிற்க !

எழுதியவர் : தருமராசு (12-Jul-16, 9:51 pm)
Tanglish : parigaram
பார்வை : 99

மேலே