என் கல்லறையில் கூட நம்ம ஞாபகம் அழியாதுடா

நான் செத்துட்டா
என் கல்லறையில் கூட
நம்ம ஞாபகம் அழியாதுடா!

அந்த அளவுக்கு நான் உன் மேல வச்சேன் பாசம்,
என் லவ்வை நீ புரிஞ்சிக்கும் போது
அத நான் பார்த்து சந்தோஷப்பட முடியாது.

ஏன்னா,
நீ இதை படிக்கும்போது
நான் உயிரோடு இருக்க மாட்டேன்.

இப்ப சாகுறது நீ கவலைப்படத்தான்.
நீ ஆசைப்பட்ட மாதிரி நல்ல பொண்ணு
உன் வாழ்க்கையில் கிடைக்கும்.

நீ என்னை நினைச்சு
எவ்ளோ அழுதாலும்
நான் வரமாட்டேன்டா!

ஆதாரம்:

tamil.oneindia/news செய்தியில் வந்த 'தற்கொலைக்கு முன் போனில் பேசினாளே... இப்போது புலம்பும் பிரியதர்ஷினி காதலன்!' என்ற தலைப்பில் அமைந்த செய்தி.

சேலம் கல்லூரி மாணவி பிரியதர்ஷினியின் மரணத்திற்காக என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய இளம் தலைமுறை எழுத்தாளர்கள் இத்தளத்தில் இந்த விதத்தில்தான் கவிதை எழுதுகிறார்கள்.

கருத்து: எண்ணத்திலும், எழுத்திலும் இளம் தலைமுறையினர்க்கு பெண்ணானாலும் சரி; ஆணானாலும் சரி; நேர்மறையான எண்ணம் (Positive thinking) வளர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Jul-16, 10:43 pm)
பார்வை : 897

மேலே