மனைவி-கங்கைமணி

தேனிலே துளி எடுத்து
தீட்டி வைத்த சித்திரமாய்,

மஞ்சத்தில் மதிமயங்க
மலர்ந்து வரும் மல்லிகையாய்,

வாய் வெடித்த வாசமலர்
வான் வியக்கும் நேரத்தில்.,

உணர்வுற்ற ஆசைகளை
உடற்கட்டு மறைத்திருக்க.,

கட்டவிழ்த்த காவிரியாய்
கன்னியவள் கண்ணியத்தை
களைந்துவிட்டு .....,

பால் பொதிந்த பாத்திரத்தில்
பக்குவமாய் பருகவிட்டு.,

பஞ்சணையில்..,
பனிப்பூவாய் மலர்ந்திடுவாள்.
மனைவி என்னும் மங்கையவள்.!
-கங்கைமணி

எழுதியவர் : கங்கைமணி (13-Jul-16, 9:06 am)
பார்வை : 754

மேலே