சீரியல் வெகு சீரியச்

சீரியல் ... வெகு சீரியச்

பச்சிளம் வயதில்
பலதையும்
சேர்த்து ஊட்டியதால்
இன்று
தனித் தனியாக வேகவைத்து
காலை
மாலை
இரவு என கடமைக்காக
மேசைமேல் கிடத்த
கண்கள் குளமாவது
இன்றா ? நேற்றா ?

இப்போ பிள்ளைகள்
காலையில் சீரியல் உண்டு
இரவில் சீரியல் பார்த்து
வாய் வெந்து
மதி கெட்டு
வீதியில் உலாவுவது
வெந்த புண்ணில்
வேல் பாய்கிறது ............
மனம் படும்பாடு பொறுக்கவில்லை
காரணம் ?

நோய் கண் வழியா...
காது வழி வந்து
வாய் வழியா போவது
புதிதா என்ன ..........
எல்லாம் ஓன்றே !
இது வெகு சீரியச் !

எழுதியவர் : தருமராசு (14-Jul-16, 9:57 pm)
பார்வை : 69

மேலே