ஆறாம் விரல்

என் ஆறாம் விரலாய் நீ - என்னை தினமும் ஆள்கிறாய்
புகையின் மத்தியில் நான் புதிதாய் பிறந்தேன்
நண்பனாய் நீ வந்ததன் பின் நானும் நானல்ல
பெற்றோருக்கு மறைவில் உன்னிடம் கைசிறையாகியதையும்
சுகமாய் தான் உணர்த்தேன் - தனிமைக்கு மருந்தாய் நீ வந்தாய்
தனித்திருக்கும் நொடியெல்லாம் உன் நினைவு தான்
இரத்த வாந்தி வந்த போதும் நினைக்க வில்லையே
இன்று புற்று நோயால் படும் வேதனை வெந்த புண்ணில்
ஈட்டியை பாய்ப்பதை உணரும் போது தான்
சுகம் எல்லாம் சுமையாய் போனது சிகரெட்டின் சீக்ரெட் மெதுவாய் புரிந்தது

எழுதியவர் : மாஹிரா (16-Jul-16, 10:32 am)
Tanglish : aaram viral
பார்வை : 238

மேலே