ஊமைக் கூட்டம்
ஊமைக் கூட்டம்
வியர்வைக்கு சொந்தக்காரன் கடன் பட்டிருக்க
கள்ள நோட்டு அடித்தவன் கணக்கு கேட்கிறான்
அரசியலில் கூத்தடிக்க !
வேலியே பயிரை மேய
மேலவை மேச்திரி
கயிறு திரிக்கிறான் கதவடைத்து !
வெந்த சோற்றை முகர்ந்து பார்க்கும் வணங்காமுடி
கப்பம் கட்டாமலே
சொத்துக் குவியல் செய்கிறான்
அவன் சுற்றம் பகலிலே படுத்துறங்க !
சனநாயக கீழிறப்பு அரங்கேற
பாராளுமன்ற வந்தேறிகள் தர்பார் நடத்துவது .......
காசுக்கு ஓட்டு ...
மிக்சிக்கி மின்சாரம்.......
சீறாட்ட தாலாட்ட வரி ...........
மொத்தத்தில் வாய்க்கும் வயிற்றிக்கும்
இடைவிடா போராடும் ஊமைக் கூட்டம் கேட்டறிய ..
ஆகம பஞ்சாங்கம்
எப்பொழுதும் பிதற்றுவது ...
சமயம் பார்த்து நடந்து கொள்
நல்லது நல்ல படியா நடக்கும்
நல்ல நாள் குறித்துக் கொடுக்க
நான் இருக்க !