பொற்சிலை

காந்த மலர் சோலை -அவள்
கழுத்தில் அணிந்திருந்தால் மணிமாலை
என் சிந்தையை ஆட்டிப்படைக்குதே
அவளது சின்ன இடை தெரியும்படி
கட்டிருந்தால் சின்னத்திரை!

அவள் ஒரு சிங்காரக் குயில்
என்னை மீட்ட வந்த தென்றால்
அவள் தெருவில் நடந்து போனாள்
திரை மலர்ந்து பார்த்தேன்
மயில் தோகை நாடகம் போட்டாள்
என் மையலைத் தீர்க்கவே!

கழுத்தை அறுக்கவில்லை
மாறாய் என் கவனத்தை ஈர்த்தாள்...
அவளை பார்த்த நாளாய்
என்னிடத்தில் என் நெஞ்சம் இல்லை
என் தூக்கத்தைக் களவாடிய
தொலைக்காட்சிதான் அவள்!
தின்ன கொண்டு வந்து கொடுத்தாள் அவல்
என்னை தூண்டில் போட்டு
துடிக்க வைக்கும் மின் ஆட்சி நீ
தினம் என்னை காத்தருளும் மீனாட்சிதான் அவள்

மீட்டும் விரல்களோடு பேசுவது வீணை
காளையர்கள் தேடிப் பிடிப்பது பெண் மானை
மலர்களோடு உறவாடும் தென்றல்
அவள் மனதோடு பேசும் காதல்
அவள் இல்லையென்றால் வரும் சாதல்

கடலோடு பேசும் அலை
என் காதல் ஒரு தலை
ஆதலால்தான்...
கடிசிவரை பேசவில்லை
இளம் பொற்சிலை...

எழுதியவர் : (16-Jul-16, 10:45 pm)
பார்வை : 121

மேலே