ஆடி கூழ்
ஆடிமாதம் அம்மன் கூழ்
முதல் வாரமா? கடைசி வாராமா?
அடச்சீ… நாளைய சோத்துக்கு வக்கில்லை
ஆடி மாசம் கூழ் கேக்குதா அம்மன்…?
எரிந்து விழுந்தவனை
எளக்காரமாய் பார்த்தபடி
மனைவி கேட்கிறாள்
அட போக்கத்த கவிஞா
உனக்கெல்லாம் குடும்பம் எதுக்கு..?
உனக்கெல்லாம் கவிதை எதுக்கு…?
அவளது நியாயமான கேள்விக்கு
பதில் சொல்ல முடியாமல்
வெட்கித் தலை குனிந்து
பேனாவும் பேப்பருமாய்
பழைய குருடி கதவை திறடி கணக்காய்
மீண்டும் முழ்கினேன் எனது கவிதையாற்றில்.