காமராஜர்

அன்றைய வகுப்பு
அட்டவணை பார்த்து
புத்தகங்களை
எடுத்துவைத்துக்
கொண்டிருந்த
ராமுவிற்கு
திடீரென
முட்டை நினைவில்
வர
சமூகத்திற்கும்
அறிவியலுக்கும் நடுவே
தன் தங்கைக்காக
மஞ்சப்பைக்குள்
மறக்காமல்
எடுத்து வைத்துக்கொண்டான்
இன்னொரு
சாப்பாட்டு தட்டை

எழுதியவர் : நிலாகண்ணன் (19-Jul-16, 8:03 pm)
Tanglish : kaamaraajar
பார்வை : 609

மேலே