கவிஞன்
தனிமை எனும் நரகத்தில்
தனித்து நான் இருக்கையிலே...
கட்டழகு கன்னி ஒருத்தி
காளையவன் கண் எதிரே வந்து
என் எழிலைப்பார் என்றால்...
கண்டு இரசிக்காமல் இருந்தால்
அவனோ குருடன்!
இயற்கை எழிலைக் கண்டும்
கவிபாடாதிருந்தால்
அவனோ ஊமை!
ஆதலால்தான்
நான் பார்த்தேன்
இளம் பெளர்ணமி நிலவை!
கண்டால்...
மறக்கவா முடியும்
அவளின் உருவை!
அவளைக் கண்ட பின்புதான்
நான் ஒரு கவிஞன் ஆனேன் என்பது உண்மை!