தினம் ஒரு காதல் தாலாட்டு - தனிமை - 69 - 169

பூ மஞ்சள் பூசிடும் வேளை
புன்னகை சிந்தினாள் ராதை
குழலோடு வந்த கண்ணன்
குழலே வாசிக்கவில்லை…”

மார்கழி மாத குளிரில்
மன்மத லீலை பெரும் அளவில்
மலர்வழி நுழைகின்ற பனியில்
மயங்கி மிளிருதே இதழ்கள்…

வட்ட நிலவொளிப்பட்டு
பூக்கும் அல்லிமொட்டு
கிட்டேச் சென்று தொட்டு
அள்ளி முடிக்கிறாள் சிட்டு..

அன்பு என்னும் வேதம்
காதலின் அடி நாதம்
ஆருயிரே நீ போதும்
என்ஜீவன் மகிழ்ந்து பாடும்

(“பூ மஞ்சள் பூசிடும் வேளை)

மந்திரம் ஓதும் மானே
மன்மத வித்தை தானே
மந்தகாச புன்னகை வீசி
மயக்கிடும் ஆளை தானே

இந்திர்ய சுகத்தின் அருமை
இந்திரனும் அதற்கு அடிமை
சந்திர சூரியன் இல்லையேல்
இவ்வுலகம் வெறும் வெறுமை..

நேரம் கைகூடி வந்தால்
எல்லாம் நடக்கும் நன்றாய்
சோடை போகாமல் வாழ்ந்தால்
சுகமும் துக்கமும் ஒன்றாம்..!

(“பூ மஞ்சள் பூசிடும் வேளை)

எழுதியவர் : சாய்மாறன் (21-Jul-16, 5:44 pm)
பார்வை : 58

மேலே