ஊருகள் பலவிதம்•••

வாடிகள்" யாவும்
வாடிக்கிடக்கிறது அது
துளியேனும் துளிர்த்தெழ எதிர்ப் பார்க்கிறது

"பாடிகள்" யாவும்
வாய் மூடிக் கிடக்கிறது அது
வாய்த்திறந்து பாடிட
எதிர்ப் பார்க்கிறது

"போடிகள்" யாவும்
வெறிச்சோடிக் காண்கிறது அது நாடிச் சேர்ந்திட
எதிர்ப் பார்க்கிறது

"கோடிகள்" யாவும் தெருக்
கோடியில் கிடக்கிறது அது
முன்னேறி வரும் எப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"பட்டுகள்" யாவும்
பட்டுக் கிடக்கிறது அது
பளபளக்கும் எப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"ஊர்கள்" யாவும்
உறக்கமின்றி கிடக்கிறது அது உறங்கி விழித்தெழும் எப்போதென எதிர்ப் பார்க்கிறது

"புரங்கள்" யாவும் ஒரு
புறத்தில் கிடக்கிறது நல்ல
நேரம் வரும் எப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"குப்பங்கள்" யாவும்
குப்பையாய் கிடக்கிறது அது சுத்தங்களாகும் எப்போதென எதிர்ப் பார்க்கிறது

"நகரங்கள்" யாவும்
நரகமாய் தோன்றுது அது
சொர்க்கமாவது எப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"மேடுகள்" யாவும்
சரிந்து கிடக்கிறது அது
ரோடுகளாவது எப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"மலைகள்" யாவும்
வளர்ச்சியற்று காண்கிறது அது வளர்வதெப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"காடுகள்" யாவும்
கேடுகெட்டு கிடக்கிறது அது நாடாவது எப்போதென
எதிர்ப் பார்க்கிறது

"ஆறுகள்" யாவும்
சொந்தங் கொண்டாடி
முடங்கா சோறு வருமென
எதிர்ப் பார்க்கிறது

"நாடுகள்" யாவும் ஒரு
கேடுகள் இல்லாமல்
வாழட்டும் வாழ்வாங்கென
எதிர்ப் பார்க்கிறது

"குறிச்சிகள்" யாவுமே
எழிச்சிகள் பொங்கிடும்
எப்போ தென்றே தினம்
எதிர் பார்க்கிறது

"பாக்கங்கள்" யாவுமே
ஒரு ஏக்கங்கள் இல்லாத
நாள் எந்த நாள் என்றே
எதிர் பார்க்கின்றது

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (21-Jul-16, 7:28 pm)
பார்வை : 79

மேலே