போர்க்களத்தில் ஒரு பூ

போர்க்களத்தில் ஒரு பூ

அன்று
தன்
தாயின் கருவறையில்
திருமகளாய்
உதித்தவள்;
காலம் தந்த
வலிகளால்
வீரத்திருமகளாய்
உருமாறினாள்;
சோதனைகள்
பல கடந்து
சாதனைகளை
ஈட்டினாள்;
தன்
மக்களின்
விடுதலைக்காய்
தன்னையே
அர்ப்பணித்தாள்;
தன்
குரலெனும்
மந்திரத்தால்
நாடெங்கும்
வீர முளக்கம்
இட்டாள்;
இறுதியில்
யுத்தம் எனும்
போர்வையில்
சிங்கத் தோல்
போர்த்திய
விலங்குகளால்
நாசப்படுத்தப்பட்டாள்;
அன்று
போர்க்களத்தில்
ஆடையற்ற
நிராயுதபாணியாய்
தன்
தாய்மண்ணில்
மண்டியிட்டு
மண்ணுக்குள்
விதையானவள்;
இன்று
விருட்சமாய்
அனைவர்
நெஞ்சிலும்
வாழ்கிறாள்;
வீரத்திலகமிட்ட
வீர மங்கையாய்.....!

எழுதியவர் : அன்புடன் சகி (23-Jul-16, 9:43 am)
பார்வை : 380

மேலே