காடுறங்கும் பொழுது

கார் நடுங்குமொரு கடுவளி;
கடுவளியில் காடசையும் கீர்த்தனைகள்;
கீர்த்தனைகள் கேட்காத தூரத்தில்
பூக்களின் வாசம்;
பூக்களின் வாசம் தீண்டாத தூரத்தில்
நதியோடுமோர் ஓடம்;
ஓடத்தின் ஒய்யார அசைவில்
சிறகுடைந்ததோர் பட்சி;
பட்சியின் பாத தடத்தை அசைத்து
பார்க்கிறது கார் நடுங்குமொரு
கடுவளி;

எழுதியவர் : (26-Jul-16, 9:09 pm)
பார்வை : 89

மேலே