நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கவி

27- 7-2016
மரகத முத்தின் மதிப்பு
கூடியது
பொன்னால் அன்று
மாரி முத்துவே
நீ பிறந்த பொன் நாள் அன்று

மாரியே
அன்று
பாரியாய்ப் பிறந்த நீ
இன்று
இவ்வுலகில் மீண்டும்
அவதரித்தாய் உரு மாறியே

நீ சுமை தூக்குவோர்
வாழ்வை
சுமை தாங்கியாய்த் தூக்கியவன்
அவர்களின் துயரை
உன் இமை கொண்டு நீக்கியவன்

மாரியே
மக்களுக்கு நன்மைகளை
மழையாய்ப் பொழிவதால்
நீயும் ஒரு மாரியே

நீ முத்திரைப் பாளையத்தில்
பிறந்து முத்திரை பதித்தவன்
ஏழைக்கு உதவாது
நித்திரை கொள்ளாதவன்
எந்த நிலையிலும்
முகத்திரை கொள்ளாதவன்
எதிரிகளுக்கும் மட்டும்
நீ பொல்லாதவன்
எந்த நிலையிலும்
பொய் சொல்லாதவன்

அதிகம் கல்லாதவன்
ஆனாலும் அதிகமானோருக்கு ஆதவன்

அன்று ஆடி மாதம்
குடிசையில் பிறக்கின்றாய்
உன் உழைப்பால்
இன்று ஆடி காரில் பறக்கின்றாய்

மாரி முத்து
மனித நேயத்தின் வித்து
நீ கொடுப்பதோ
அனைவருக்கும் ஊக்கம் எனும் சத்து
அதனால்தான் நீ
இன்று மக்கள் விரும்பும் சொத்து

எழுதியவர் : குமார் (26-Jul-16, 9:53 pm)
பார்வை : 278

மேலே