சோம்மு சோம்மு

சோம்மு. சோம்மு!
####
என்ன பாட்டிம்மா, தும்மு, தும்முன்னு சொல்லற மாதிரி எதுக்கு சோம்மு, சோம்முன்னு சொல்றீங்க?
###
நா யாரயையும் தும்மச் சொல்லுலடடி தங்கம். பட்டணத்தில இருந்து வந்திருக்கற எம் பேத்தியத்தாங் கூப்படறென்.
###
ஓ…..மாமன் பொண்ணு பேரா? அவ பேரு சோம். அவுங்க தாய்லாந்திலெ இருக்கறபோது மாமம் பொண்ணு பொறந்தளாம். அந்த நாட்டு மொழில இருக்கற சோம்-ங்கற பேரையே உங்க பேத்திக்கு வெச்சிட்டாங்களாம். அந்த நாட்டு மொழில சோம்=ன்னா ஆரஞ்சு-ன்னு அர்த்தமாம்.
###
ஆமாண்டி தங்கம். எம் பேத்திகூட ஆரஞ்சி பழம் மாதிரி நல்லா மொழு மொழுன்னு அழகா இருக்காரடி.
###
பாட்டிம்மா, சோம்-ங்கற பேரு வடமொழின்னு சொல்லப்படற சமஸ்கிருத மொழிலயும் இருக்குதுன்னு மாமா சொன்னாரு. வடமொழிலெ சோம் –ன்னா நிலா –ன்னு ஒரு அர்த்தம். மதம் சம்பந்தப்பட்ட மது –ங்கற அர்த்தமும் இருக்குதாம். அதான் சோம பானம்-ன்னு வரலாறு பாடத்திலெகூட நா படிச்சிருக்கறென்.
####
என்ன இருந்தாலும் நம்ம தாய் மொழில வச்சிருக்கற பேரு மாதிரி இருக்காதடி தங்கம்.
########################################################################################################################################################################

(Sanskrit) Som = సోమ; สม; സോമ; સોમ; সোম; ਸੋਮ; ಸೋಮ; ; सोम; ஸோம

Som = Moon; Religious drink (boy)
Thai = ( สม) = Orange (Girl)
நன்றி: இண்டியாசல்ட்நேம்ஸ்காம்

###############################################################################################################################################################

சிரிக்க அல்ல. சிந்திக்க. பிறமொழிப் பெயர் அறிய.
விருப்பம் உள்ளவர்கள் பகிர்ந்தளிக்கவும். உங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பாததால் கருத்தளிக்கும் வாய்ப்பு தவிர்க்கப்படுகிறது.

எழுதியவர் : மலர் (27-Jul-16, 1:28 pm)
பார்வை : 170

மேலே