புறந்தள்ளுவோம்

இந்தியதேசத்தில் என்னதான் நாம் நம்முடைய சகோதரர்களாக பாவித்தாலும், ஒரு மதத்திற்கு மட்டுமே விசுவாசியாக இருப்பதிலும், தங்களை சிறுபான்மையினர் என்று சொல்லிக்கொள்வதிலும், தங்களை அடைய்யாளப்படுத்திக்கொள்வதிலும் அதீத ஆர்வமுடையவர்கள் சிற்சில இஸ்லாமிய அன்பர்கள்.
இவர்களில் ஒரு அரசியல் கட்சியினரான மனிதநேய மக்கள் கட்சி (ஒரு மதத்திற்காக, அம்மதத்தினர் மட்டுமே பங்கேற்கும் இவர்கள் போன்றோர் மதசார்பற்ற அணியாக அடையாளப்படுத்தப்படுவர். கலைஞர் கருணாநிதி, செல்வி.ஜெயலலிதா, தொல்.திருமாவளவன், காங்கிரசார் கம்யூனிசக்காரர்கள் போன்றோருக்கு இவர்கள் நன்றி என்றும் உரித்தாகும்.)
சில தினங்களுக்கும் முன்னர் மனிதநேய மக்கள் கட்சியினர் சென்னை எழும்பூர் இரயில் நிலையம் அருகே ஆர்ப்பார்ட்டம் நடத்தி உள்ளனர். எந்தப்பிரச்சினைக்காக இப்போராட்டம் நடைபெற்றது? இவர்களின் கோரிக்கைகள் யாவை?
சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினருடனான மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி புர்ஹான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வன்முறை வெடித்தது. தொடர்ந்து அங்கு பதற்றநிலை நீடித்து வருகிறது. வன்முறைக்கு பலியானோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. இதற்குத்தான் இந்த கண்டன ஆர்ப்பார்ட்டம். இவர்கள் கோரிக்கைகள் ? காஷ்மீர் மக்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த கோருவதும், ராணுவத்தை வெளியேற்ற வலியுறுத்துவதும்தான். (இங்குள்ள படங்களைப் பாருங்கள். காஷ்மீர் போலீஸார் மற்றும் இராணுவத்தினர் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்று.)
எந்த ஒரு தேசத்திலும் மதத்தின் பெயரால் தீவீரவாதம் என்பது மனிதகுலத்திற்கெதிரானது. அதைச் செய்பவர்கள் எந்த சேர்ந்தவராயிருப்பினும் கிரிமினல் குற்றவாளிகளே. ஆனால், இங்கே பாகிஸ்தான் தூண்டுதல் காரணமாக பொய்யுரை பரப்பப்பட்டு, மூளச்சலவை செய்யப்பட்டு, இந்திய தேசத்திற்கெதிராக, நம்மைக் கட்டிக்காக்கும் இராணுவத்தின் மீது வன்முறையை பிரயோகம் செய்துள்ளனர். அந்த வன்முறையாளர்களைக் கண்டிப்பதை விட்டுவிட்டு, இந்திய இராணுவத்தின் மீது விஷத்தைக் கக்குவதுபோல், ”அத்துமீறிய இராணுவம் வாபஸ் பெற வேண்டும்” என ஆர்ப்பார்ட்டம் நடத்துகிறார்கள். காரணம், மனித உரிமை மீறலாம். ஜிகாத், லவ் ஜிகாத், பத்வா அறிவிப்பது போன்றவை இறைத்தொண்டு, மனிதகுலத்திற்கு மாண்பு சேர்ப்பதாம். ஆனால், வன்முறையை அடக்கச்சென்ற ஒரு இராணுவம், அதுவும் தங்களை தற்காத்துக்கொள்ளும் அடிப்படையில் முயற்சிப்பது, அத்துமீறலாம். அடக்குமுறையாம். இதனை எந்தப்பட்டியலில் சேர்ப்பது?
அதே காஷ்மீரினை பூர்வீகமாகக் கொண்ட “பண்டிட்கள்” மற்றும் பிறமதங்களைச்சேர்ந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டு, இன்றும் உள்ளே நுழையமுடியாமல், சொத்துசுகங்களை இழந்து, தாயகத்தின் பிறபகுதிகளில் அகதிகளாக அல்லாடுகிறார்களே… இதற்காக குரல்கொடுக்க இவர்கள் மனிதநேயம் மறந்துபோனதே.. ஏன்?
இந்திய இறையாண்மையில் நம்பிக்கையில்லை.. சட்டத்தின் மீது மதிப்பில்லை. ஒருமைப்பாட்டில் உடன்பாடில்லை. பரந்துபட்ட மனித நேயமில்லை. ஆனால், இவர்கள் இந்திய இராணுவத்தை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். இந்தியாவிலுள்ள அனைத்து மதங்களைச்சேர்ந்தவர்களும் இந்திய இராணுவத்தில் உள்ளனர். உலகின் மிகப்பெரிய இராணுவம் என்பது மட்டுமல்ல. மிகச்சிறந்த பெருமைக்குரிய இராணுவமும் ஆகும்.
இத்தகைய இராணுவத்தை கேவலப்படுத்துவது, அவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குவது ஆகியவற்றைத்தான் இவர்கள் மதமும், அம்மதத்தைச் சேர்ந்த மனங்களும் கூறுகின்றனவா? வன்முறையாளர்களின் அநாகரீகச்செயலை ஆதரிக்கின்றனவா? இதுவா ஒருகுடிமகனின் பண்பு ? நிச்சயமாக இல்லை.
மனிதனாக இரு. இந்தியனாக இரு. தமிழனாக வாழ். பிறகு வேண்டுமானால் நீ எந்த மதத்தினனாகவும் இரு. காஷ்மீர் பிரச்சினை என்ன? அதன் வரலாறு என்னவென பலரும் அறிந்திருப்பதில்லை. நிலைஇப்படியிருக்க, இவர்கள் அடுத்தத் தலைமுறைக்கு இந்தியாவைப் பற்றி என்ன பெருமைகளை சொல்லிக்கொடுப்பார்கள்?
இந்தியதேசம் நம் அனைவருக்கும் சொந்தமானது. எமது தேசத்தைக்காக்க, கலாச்சாரத்தைப் பேண, இதன் பெருமைகளைப் போற்ற, தேசத்திற்கு விசுவாசமானவர்கள், இதன் முப்படைகளையும் போற்றுபவர்கள் மட்டுமே தேவை. நுனிமரத்தில் அமர்ந்துகொண்டு அடிமரத்தை அறுக்கும் அறிவிலிகள் தேவைஇல்லை. இதில் எமக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
அளவிற்கு மீறிய கருத்துசுதந்திரம், எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம், தரம்மிகுந்த சட்டங்கள் இருந்தும் இறுக்கிப் பிடிக்காத தன்மை, தங்கள் சுயநலப்பிழைப்பிற்காக அப்பாவி மக்களை அரசியல் போர்வையில் பகடைக்காய் ஆக்குவதை ஊக்குவிக்கும் போலிமதச்சார்பின்மை, இப்பிரச்சினைகளின் விபரீதம் புரியாமல், மற்றும் எதையுமே கண்டுகொள்ளாமல், போகும் தலைமுறைகள் ஆகியவையே இவர்களைப் போன்றோரின் பலம்.
இந்திய இறையாண்மையில் நம்பிக்கையும், பற்றும் கொண்ட அப்பாவி இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் விஷமர்களைப் புறந்தள்ளவேண்டும்.
இவர்களை கண்டிக்க வேண்டும். தேசத்தின் பொதுநலன் கருதி நீதிமன்றங்கள் எச்சரிக்கவேண்டும். அரசும், காவல்துறையும் இதனைப்போன்ற விபரீத போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது. .

எழுதியவர் : (3-Aug-16, 6:55 am)
சேர்த்தது : m. palanivasan
பார்வை : 114

மேலே