சிரிப்பு மாமு சிரிப்பு

‘‘‘எங்கிருந்தோ பணம் வரப்போகுது… அதான் உள்ளங்கை அரிக்குது’னு அடிக்கடி சொல்றியே.. முதல்ல உன் ‘படை’ பலத்தை ஒரு தோல் டாக்டர்கிட்டே காட்டுடா!’’
_____________________________________________________________________________

‘‘ஹமாம் 13 ரூபாய், சிந்த்தால் 19 ரூபாய், லக்ஸ் 13 ரூபாய், பியர்ஸ் 19 ரூபாய், மெடிமிக்ஸ் 16 ரூபாய்,லைபாய் 12ரூபாய், டெட்டால் 24 ரூபாய்! எதை வேணும்னாலும் வாங்கு… ஆனா, குளிச்சிருடா செல்லம்!’’

_____________________________________________________________________________
‘‘அன்பே! திருநெல்வேலிக்கு ஒரு தாமிரபரணி! மதுரைக்கு ஒரு வைகை!திருச்சிக்கு ஒரு காவிரி!சென்னைக்கு……நீ!அதாம்மே… கூவம்!’’

_____________________________________________________________________________
‘‘அந்தப் பொண்ணுங்கள்லாம் உன்னை ‘ஜெம்’னு சொன்னாங்கனு பெருமையா சொன்னியே.. உச்சி குளிர்ந்து போகாதடா! ‘ஜெம்’னா GINGER EATING MONKEY-னு அர்த்தம்டா… இஞ்சி தின்ன குரங்கே!’’

_____________________________________________________________________________
‘‘காலையில் உன் வீட்டுக்கு வந்தேன்.. மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. என் அப்பாவை போலவே உன் அப்பாவும் இவ்வளவு கேவலமாக உன்னை திட்டினாரே!’’

_____________________________________________________________________________
‘‘விருட்சம், அன்று விதையாய் இருந்தது. பெளர்ணமி, அன்று பிறையாய் இருந்தது. சிலை, அன்று பாறையாய் இருந்தது. மழை, அன்று மேகமாய் இருந்தது. ஆமாம்.. என் மனைவியே.. நீயும்கூட ஒரு காலத்தில் அன்பான மனுஷியாக இருந்தாய்…!’’

_____________________________________________________________________________
‘‘டேய்.. ஓ.சி. நாயகா! இனிமே என் பைக் எடுக்கும்போது கொஞ்சம் மணிசங்கர் அய்யரை நினைச்சுப் பாரு! ரெண்டு ரூபா ஏத்திட்டாருப்பா!’’

_____________________________________________________________________________
‘‘என் கல்யாணத்துக்கு நீ மொய் எழுதவே வேண்டாம். ஏன்னா..நீ எழுதப் போற பத்து ரூபாய் மொய்க்கு என் பக்கத்தில் நின்னு போட்டோவுக்கு போஸ் கொடுப்பியே, அதுக்கே எனக்குப் பதினஞ்சு ரூபா செலவாகும்! அதனால வேணாம் ராசா!’’

_____________________________________________________________________________

‘‘‘காசுமேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.. வாச கதவை ராஜலட்சுமி தட்டுகிற நேரமிது!’’னு எனக்கு நீ எஸ்.எம்.எஸ். அனுப்பினியே.. இன்னிக்கு உன் தட்டுல அவ்வளவு கலெக்ஷனா மச்சி?!’’

_____________________________________________________________________________
‘‘காவிரியிலகூட தண்ணியை விட்டுட்டாங்க. தடிமாடே! நீ எப்படா ‘தண்ணி’யை விடப்போறே?’’

_____________________________________________________________________________
‘‘டியர்! உன்னை மயிலுக்கும் குயிலுக்கும் ஒப்பிடலாம்… காதலோடு சொல்கிறேன்.. உனக்கு குயில் நிறம், மயில் குரல்!’’

_____________________________________________________________________________
‘‘அஞ்சாப்பு வரைக்கும் இனி எல்லோரும் பாஸாம்டா..! ம்ம்ம்.. அந்தக் காலத்துலேயே இப்படி இருந்திருந்தா நீ எலிமெண்ட்ரி ஸ்கூலையாவது தாண்டியிருப்பே..!’’

_____________________________________________________________________________
‘‘நண்பா.. பனியில் நனைஞ்ச அழகான பூக்களைப் பார்க்கும்போது, எனக்கு உன் ஞாபகம் வருது! அழகான நிலவை பார்க்கும்போதும் நீதான் ஞாபகத்துக்கு வர்றே! அழகா எதைப் பார்த்தாலும், உடனே உன்னை நினைச்சுக்குவேன். அப்பல்லாம் என்னை நானே கேட்டுக்குவேன்.. ‘இவ்வளவையும் அழகா படைச்ச ஆண்டவன் உன்னை மட்டும் ஏன் அசிங்கமா படைச்சான்?’’

_____________________________________________________________________________
‘‘உன் கல்யாணத்துக்கு நான் கட்டாயம் வரணும்னு நீ சொல்லணுமாடா..? உனக்கு ஒரு துக்கம்னா, அந்தக் கொண்டாட்டத்துல கலந்துக்காம எனக்கு வேறென்ன வேலை?’’

_____________________________________________________________________________
‘‘இன்று.. நாளை.. ஏன், எப்போதும் ஓர் இதயம் உனக்காகவே துடித்துக் கொண்டிருப்பது தெரியாதா..?மடையா.. அது உன் இதயம்தாண்டா!’’

_____________________________________________________________________________
‘‘அர்ஜுனருக்கு வில்லு..அரிச்சந்திரனுக்கு சொல்லு..குதிரைக்கு கொள்ளு..ரோஜாவுக்கு முள்ளு..நீ ஜொள்ளு..நான் லொள்ளு!’’

_____________________________________________________________________________
‘‘நன்றி நண்பா!இன்று சனிக்கிழமை. வெளியூர் வந்த இடத்தில் கோயிலே இல்லை. அவசரத்துக்கு உன்படத்தை வைத்து சுற்றிவந்து வணங்கினேன்.‘சனீஸ்வராய நமஹ!’’’

————————————————————————————————————————-

நன்றி:- ஆ.வி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (5-Aug-16, 12:29 pm)
பார்வை : 125

மேலே