கண்ணெதிரே தோன்றினாள் தொடர் கதை - பகுதி 7
ஹாஸ்பிடலில் சுய நினைவின்றி கிடைக்கும் பாட்டியை கண்டவுடன் விக்னேஷுக்கு ஒன்றும் புரிய வில்லை. பாட்டிக்கு என்னாச்சு? நான் பாட்டிக்கு காபி குடுக்க போறப்போ கொஞ்சம் தல சுத்துற மாறி இருக்குனாங்க தம்பி திடீர்ந்து விழுந்துட்டாங்க என்றால் பார்வதி. பெரிய டாக்டர் இப்ப வந்துருவாங்க என்னும் போதே தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாக கடற்கரையோரம் முதலையின் தாக்குதலில் பெண் பலி! முகம் கை சிதைவு . நபர் யாரென்று இன்னும் அடையாளம் காணவில்லை என்ற அறிவிப்பை தொடர்ந்து இவன் பரிசளித்த நீல நிற கைப்பையும் செருப்பும் திரையில் தோன்றி மறைந்தன. நோ ..... நித்தி என்ற கதறலுடன் நிலத்தில் சாய்ந்தான் விக்கி. ஒன்றும் புரியாமல் பார்வதி தம்பி எழுந்துருக என்று அவனை தேற்ற முயற்சிக்கையில் பாட்டியின் கடைசி ஆசையாக விக்கியை பார்க்க ஆசைப்படுவதாக நர்ஸ் கூற வெளியே சொல்ல முடியா காயத்துடன் பாட்டியை பார்க்க சென்றான். பாட்டி மூச்சியை இழுத்து இழுத்து விட்டுக்கொண்டே ஏதோ சொல்ல பார்த்தாள். அவளால் பேச முடியவில்லை. பவா..னி என்று ஏதோ சொல்ல பார்த்தவள் விக்கியின் கையை இருக்க பற்றி மூச்சையானாள். விக்கி ஹாஸ்ப்பிடலே வெடிக்கும் அளவு கதற தொடங்கினான். ஆறுதல் சொல்ல நண்பன் சுகன் மட்டுமே அருகில் இருந்தான்.
பாட்டியின் ஈமச்சடங்கில் பாட்டியுடன் அவனது செல்போனையும் தீயிற்கு இரையாக்கினான்.
கண்ணீரின் மொத்த ரூபமாய் திரிந்தவனை சுகன் தனது கிராமத்துக்கு அழைத்து வந்தான். நித்தியை பற்றி வேறெந்த தகவலும் தெரியாதலால் மறைந்த நித்தியின் மறவா நினைவுடன் வாழ்ந்தான்.
டேய் விக்கி இன்னக்கி ஆபீஸ்ல முக்கியமான வேலையா கொழும்பு போகணும். ஆனா உன்னைய அழைச்சுண்டு போக மனசு இல்ல. உன் பழைய நினைவுகளை கொழும்பு பயணம் மீட்டிடுமோனு பயமா இருக்கு என்றான் சுகன். இல்ல சுகன் நானும் கொழும்புக்கு போகணும் ஏ பாட்டிமா, நித்தியோட மானசீகமா பேசணும் நானும் வாறென்டா... மீண்டும் தன் வாழ்வில் வசந்தம் தொடர போவதை அறியாமல் கண்ணீரை துடைத்துக்கொண்டான் விக்கி.