நினைப்பு

முதலில் போற்றுவதும்
பின் தூற்றுவதும்...
அன்று முதல் இன்றுவரை
எல்லா ஆண்களும்
தொடர்ந்து செய்து வரும்
வேலைகளைத்தான்
இன்று நீயும் செய்து வருகிறாய் - என
நன்கு தெரிந்திருந்தும்...
ஏனோ உன்னிடம் ஏமாந்து போனேன்?!

நீ என்னிடம் கெஞ்சிய போதும்
நான் அன்று மிஞ்சினேன்
நீயோ. எனை கொஞ்சினாய்...
அன்றும் இளமை வேகத்தில்
உன்னை நான் தள்ளினேன்...

ஆனாலும் அதை நீ பொருட்படுத்தாமல்
ஆசையாய் எனை கிள்ளினாய்...!

என் பலவீணத்தை
இரகசியமாய் தெரிந்து கொண்டு
எனை ஏன் தினம் கொஞ்சுகிறாய்?

என்னால் ஈடுகொடுக்க முடியாதென்று
இன்னும் மெளனம் சாதிக்கிறாயே...

முட்டாள்...!
என்னால் நன்றாகவே
சேவை செய்ய இயலும்...
எனினும்
நான் ஏன் தயங்குகிறேன் தெரியுமா?

தெரிந்துகொள்...

உன் காதலை நான் மறக்கவும் முடியாமல்
ஆசையாய் செய்த செய்கையை
மண்ணிக்கவும் முடியாமல்....
தனித்திருந்து...
என்னை நானே தண்டித்துக் கொள்கிறேன்...!

உண்மையான உன் காதலை
அன்று உதசினப்படுத்தியதை நினைத்து
ஒவ்வொரு நாளும் வருந்துகிறேன்...!
இன்னும் முதிர் கன்னியாகவே
இப்பூமியில் உலா வருகிறேன்...
உன்னைப் போல் ஒருவன்
எனக்கு கிடைக்காததால்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (5-Aug-16, 8:06 pm)
Tanglish : NINAIPPU
பார்வை : 151

மேலே