தவிப்பு

வேலை தேடுவதை விட்டுவிட்டு
'என் திமிரழகியே' என
கவிதை எழுதுகிறான் கோபி

வேலை தேடுவதையே
என் வேலையாக்கிவிட்டேன் என
புன்னகை செய்கிறான் இனியன்

பேஸ்புக், வாட்ஸ் அஃப் என
எல்லாத்திலும்
தொடர்பு எல்லைக்கு
வெளியே இருக்கிறான் சந்துரு

கடுப்பாயிருக்கு மச்சி
வேலை அதிகம்
சம்பளம் கம்மி என
புலம்புகிறார்கள் பாலா, கோகுல்

நம்ப பசங்க எவனுமே
பேசமாட்டறானுங்க என
தரையை வெறிக்கிறான் சுதன்

படித்து முடித்ததும்
வேலை கிடைத்தவர்கள்
அதிஸ்டசாலிகள்

வேலை கிடைத்ததும்
நண்பர்களை பிரியாதவர்கள்
பாக்கியமான்கள்

ஆனால் அப்படியெல்லாம் தந்துவிட
வாழ்க்கை ஒன்றும் தோழனில்லை.

எழுதியவர் : கோபி சேகுவேரா (5-Aug-16, 9:39 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : thavippu
பார்வை : 65

மேலே