வலி

பிறர் கவலை(கஷ்டம்)
உனக்கு வரும்
பொழுது தான்
அவர் வலி உனக்கு
புரியும்

நேர்மையானவனாக
நீ இருந்தால்
உனக்கு சகிப்புத்தன்மையோ
கண்டும் காணாமல்
போகும்
மனப்பக்குவமோ
இருந்தால்
அன்றி
நீ இப்பூமியில்
வாழ்வது அரிது

நானே
உணர்ந்திருக்கிறேன்
(# யாரும் சொல்லாமல்)



(# யாரிடமும் சொல்லாமல்)
ஆயிரம் முறை இறந்திருக்கிறேன்
நெஞ்சு வலியில்

நெஞ்சு வலி கூடுகிறது
இப்பொழுது
இந்த கூட்டை விட்டு
உயிர் போவது எப்பொழுது

அம்மா
உன்னோட
கருவறையிலே
இருந்திடறன்மா
இந்த உலகம்
ரொம்ப அழுக்குமா

********

தற்கொலை செய்துகொள்வது
மிகத் தவறு
உன்னை பெற்று வளர்த்த தாய் தந்தை
என்ன அரும்பாடு பட்டு
பாராட்டி சீராட்டி
நிறைய கனவுகளோடும்
ஆசைகளோடும்
உன்னை
மாரோடும் மடியோடும்
சுமந்திருப்பார்கள்.
ஓர் நொடியில்
அதை எல்லாவற்றையும்
போட்டு உடைக்க பார்க்காதே

தற்கொலை என்பது எதற்கும்
தீர்வு ஆகாது...

வாழ்ந்து காட்டுவதே
வாழ்க்கையின் சிறப்பு

*********

எனக்கு
பிறப்பு இறப்பு
எல்லாம்
ஓர் மாயையாகவே தோன்றும்.
நாம் வாழும் வாழ்க்கையே ஓர் மாயை

அதில் எவ்வளவு
பிழைகள் என்று தோன்றும்

சாக வேண்டும் என்று எண்ணியதில்லை.
ஏன் இந்த உலகில் வசிக்கிறோம்
என்றே எண்ணியதுண்டு

வாழ்க்கை பற்றி
சொல்ல வேண்டுமென்றால்

வாழ்க்கையெனும்
வழியை பிடித்து
பயணிக்கையில்
இறப்பு எனும்
முடிவை
எல்லோரும் கட்டாயம்
அடைவோம்

நடுவில்
இந்த
வஞ்சகம்
கேவலம்
பலாத்காரம்
கொள்ளை
கொலை
பொய்
துரோகம்
வேண்டாமே

உன் பெயரை ஒருவர்
கேட்டால்
தமிழ் தேன் போல்
உணரவேண்டும்
தேள் கொட்டினது போல்
நினைக்கக்கூடாது

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (5-Aug-16, 11:15 pm)
Tanglish : vali
பார்வை : 312

மேலே