வானவில் பெண்

என் கனவுகளுக்கு வர்ணம் பூச
வானவில்லாய் வந்தவள் தான்
எனை தனிமை சிறை வைத்து
சென்று விட்டாள் மாயமெனவே ,,,,,!

காணும் காட்சிகளில்
குழம்பி தான் தவிக்கிறேன்
கண்மணி உன் முகமும் தான்
கண்ணுக்குள்ளே நிற்குதடி ,,,!

ஈ மொய்த்த பண்டமென
எனை மொய்த்து சென்று விட்டாய்
ஈ மொய்த்த பண்டமென்றே
எனை வாங்க யாருமிலர் ,,,,

மனம் இறங்கி வந்து விட்டால்
மாங்கல்யம் உனக்கணிவேன்
மனம் மாறாது சென்றாலோ
என் மரணத்தையே பரிசளிப்பேன் ,,,,,!

என்றும் ப்ரியமுடன்
தங்கதுரை

எழுதியவர் : தங்கதுரை (6-Aug-16, 5:29 pm)
Tanglish : vaanavil pen
பார்வை : 599

மேலே