சந்தேகம்

மனைவியாள் அறியாள் மெய்க் காப்பாளனான
தன் கணவன் ஒரு சந்தேகப் பேர்வழியென்று !

கணவனானவன் அறியான்
மனைவியானவள் தம்மீது
முழு நம்பிக்கை உடையப்
பேர்வழியென்று !

சந்தேகத்தை நம்பிக்கை
நம்பிக்கையை சந்தேகம்
இரண்டும் விளையாடும்
விளையாட்டின் விளைவே
விரக்தியின்வெள்ளாமை
தாங்கிக் கொள்ளாமை !

அறிவுக்கு எட்டச்செய்யும்
பிரிவுக்கு முழு ஆயத்தம்
பிரித்ததும் சந்தேகம் பிரிந்ததும் சந்தேகம் இதை அறிந்தவர் அதே தவறை அவரும் செய்யாதிருப்பாரா
சந்தேகத்திலும் சந்தேகம்
•••••

எழுதியவர் : Abraham Vailankanni Mumbai (7-Aug-16, 8:49 am)
Tanglish : santhegam
பார்வை : 357

மேலே