இரந்துண்ணும் காதல்

அறிவை அசட்டையாக்கும்
ஆசையில் மட்டையாக்கும்
ஆராதிக்கச்செய்யும் கொஞ்சம்
ஆத்திரமூட்டிச்செல்லும் காதலியே,

காத்திருப்பது தவம்
காதலென்பது வரம்.

அள்ளிக்கொள்ள ஆசை
எத்தனித்தாலும்
தழுவிக்கொள்ள வாய்ப்பின்றி
தள்ளிச்செல்கிறாய்!

ஈர்க்கிறாய் ஏங்குகிறேன்
சூரியன் நீ சூரியகாந்தி நான்.
உதிக்கிறாய் ஒளிரும் என் பகல்
உடனே மறைகிறாய் இருளில் என் தேடல்!

கொத்தும் பார்வை
குத்திக் குதற
பாவனை முத்தங்களிலேயே
மருந்திடுகிறாய்.!

இன்னும் காயங்கள்
யாசிக்கிறேன்.!

சுவாசம் எனக்கு நீ
சொல்லிவிட்டு செல்
இறக்க கூட நான் தயார்
நீ எனக்கு இல்லையென்றால்

அவனன்றி ஓர் அணுவும் அசையாது
ஆன்றோர்கள் சொன்னார்கள்
நீயின்றி என் ஆன்மா துடிக்காது
என்பர் எனை நன்கு அறிந்தவர்.!

** ** ** ** ** ** ** **

காதல் காதல் காதல் போயின் சாதல்
என்றே காலங்காலமாய் தான் காதல்.

காத்திருந்தால் தான் காதல் அன்று.
காத்திருப்பதெல்லாம் காதலில்லை இன்று.

இன்றையக்காதலில் ஏதோ ஒரு இடறல்
எச்சிலையும் சுவைக்கும் ஏகாந்தமோ காதல்!

எழுதியவர் : செல்வமணி (11-Aug-16, 7:50 pm)
பார்வை : 103

மேலே