தக்காளி சட்னி

அம்மா தோசைக்கு தக்காளி சட்னி
என்று அக்காவும்
நானும் சமையல் அறை ஓட நான் முந்திக்கொண்டு சட்னியை எடுத்து
வெவ்வ வெவ்வவா

இப்ப என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
அம்மா அக்காவுக்கு
அந்த சாம்பார
எடுத்து ஊத்து
அக்கா நா வாரன்
அம்மா இங்க
பாரும்மா பிரபாவே

எல்லா சட்னியும்
எடுத்துக்குட்டா
உங்ககிட்ட ஒரே
தொல்லையா போச்சு
என்னதான்டி உங்களுக்கு
பிரச்சன
சட்னி தான்

எங்க அந்த வாண்டு
இங்க தான் இருக்கன்
கிட்ட வா
ஊம் வந்தா நீ அடிப்ப
வர்லனாலும் நான்
அடிப்பேன் புடி புடி
புடி அவள...
மாட்னியா மாட்னியா!

சட்னி எங்கடி?
சட்னியா! அப்படினா?
ஓவ்...முழுசா சாப்டு
முடிச்சிட்டியா...
உம்...எங்களுக்கு சட்னி?
வாம்மா மின்னல்
இந்தா சாம்பார்ர்ர்...
நாளைக்கு சட்னில
கையவச்சி பாரேன்...
நாங்களாம் எப்புடி
எடுக்கறோம்ன்றத மட்டும் பாருங்களேன்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Aug-16, 4:49 pm)
Tanglish : thakkaali chatni
பார்வை : 127

மேலே