பலூன் வியாபாரி

விலை போகுமா

உலக அதிசயம் அம்மா
அழகான காற்று
அத அடச்சுதா நானும்
பொழப்பு நடத்துர

பொழுது சாய போகுது
ஆனா நா இன்னும் பாக்கலயே
என் தெய்வங்கள

உச்சி வெயில்எ அடிக்கயிலேயே
அரை வயித்த நிறப்ப
வித்து போயிரம் இன்னக்கி
அது கூட இல்லயே

விலை போகாம தேங்கிதா
கிடக்குதம்மா என் கையில்
வண்ணங்கள்.நிறைந்த
பலூனும் பசியும்

கோடி கோடியா நா சம்பாரிக்கல
இலட்சம் இலட்சமா நானும்
சேத்து வைக்கல தாயி

நாலு நாள் பட்டினியும்
மூனு நாள் விரதமும்
இருக்கயில இந்த வாரம்
ஏழு நாள் விரதம் ஆக போகுது தாயி

விலை போகுமா காற்று அடைத்த
என் பலூனும் பசியும்

பாண்டிய ராஜ்

எழுதியவர் : பாண்டிய ராஜ் (12-Aug-16, 9:20 pm)
சேர்த்தது : பாண்டிய ராஜ்
பார்வை : 58

மேலே