மடிதனில்
அடிவயிறு வலிக்கிறது
ஆனாலும் இனிக்கிறது
நெஞ்சில் மிதிக்கிறாய்
சுகமாய் இருக்கிறது
எட்டி உதைக்கிறாய்
என்னவாக இருக்கிறது தெரியுமா
சொல்ல வார்த்தை இல்லை அதை
எட்டி உதைக்கும்
பாதத்திற்கு
ஆயிரம் ஆயிரம்
அன்பு முத்தங்கள்
என் பட்டே
பார்த்து உதை
உன் பிஞ்சு பாதம் வலிக்கப்போகிறது
ஆர்மோன்களே
இடுப்பெலும்பை
நன்றாக விலக்கு
என் செல்லத்திற்கு
வலிக்கப்போகிறது
உனை முதன் முதலாக
பார்த்ததும்
என்ன செய்தேன்
என்று கேட்கிறாயா!
உனை தொட்டு தூக்கி
மாரோடு
அணைத்து முத்தமிட்டேன்
உனை தொட்டு தூக்கிய
அந்த மாத்திரத்திலேயே
என் மார்பில் பால்
சொரியக் கண்டேன்
நீ வயிற்றில்
இருக்கும் பொழுதே
நான் ஆயிரம் கதைகள்
உன்னிடம் கதைத்திருக்கிறேன்
நிறைய பேசிக்கொண்டே இருப்பேன்
உனக்கும்
எனக்குமாய்
பாடலை சேர்ந்து கேட்பேன்
உன்னிடம்
இருந்து ஒற்றை இடி
நீ என்னிடம்
பேசிக்கொண்டிருப்பதை
நினைத்து மகிழ்ந்து
உன் தந்தையை
கூப்பிட்டு
சொல்லி மகிழ
அவர்
உனை
தொட்டு பார்த்து
முத்தமிடுவார்
தூங்கும் பொழுதும்
வயிற்றில் கைவைத்து
உனை கட்டிக்கொண்டே
துயிலுவேன்
மறந்தும்
புரண்டு படுக்காமல்
நீ என்னை
அம்மா என்று
அழைத்த
அந்த நொடி
என் வாழ்க்கை
பூரணமடைந்தது
என் மகனே
என் மகளே
மகனே
மகளே
அம்மாவிற்கு
எதுவும் வேண்டாம்
உன் மடி போதும்
காலத்திற்கும்
அதிலே உறங்கிடுவேன்
அதிலே உறைந்திடுவேன்
(இறந்திடுவேன்)
கட்டி பிடித்து சாய்ந்துஅழ (பாராட்ட)ஒரு
தோள் வேண்டும்
படுத்து அழ
ஒரு மடி வேண்டும்
எல்லாவற்றிற்குமாய்
இறைவன்
எனக்கருளிய
என் உயிர்கள்
நீயும் உன் தந்தையும்
என்றும்
நான்
உங்களை (என் உயிர்களை)
நன்றாக பார்த்துக்கொள்வேன்.
நீங்கள் தான்
என் உலகம்
மகனே
ஆ ஆ
என்னம்மா
என்னவென்று
தெரியவில்லை
நெஞ்சு வலிக்கிறது
உன் மடியை கொடு
அப்பாவ கூப்டுப்பா
அப்பா அப்பா
அம்மா அப்பா
வந்துட்டாரும்மா
என்னங்க
ரெண்டு பேரும்
சமத்தா
சண்ட போடாம்ம
எப்பயும்
ஒத்துமையா
இருக்கணும் சரியா
பொறுமையா
எடுத்துச்சொல்லுங்க
தங்கமான மகன்
சரியா செய்வான்
அப்பா மேல
கோவப்படக்கூடாது
செல்லம்
அம்மா
நாங்க
ரெண்டு பேரும்
சும்மா தாம்மா சண்ட
போட்டுப்போம்
நீ ஏம்மா
இப்படிலான் பேசற..
அதான்
நீ எங்கக் கூடவே
இருக்கயே
நீ எங்கள பாத்துக்க மாட்டீயாடி
உங்க ரெண்டு பேரையும்
விட்டுப்போய்டுவனோனு
பயமா இருக்குங்க
உயிர் போதேனு
பயப்படலங்க
உங்க ரெண்டு பேரையும்
தனியா தவிக்க விட்டு
போறானேன்னு தான்
கவலையா இருக்கு
ஒரு கையால் என்னையும்
மறு கையால்
மகனையும்
இறுக்கிக்கொண்டு
சிரித்த முகம் மாறாமல்
கண் மூடினாள்...
என்னை எப்படியாவது காப்பற்றுங்கள்
என்று
அன்று சொன்னாள்
காப்பாற்றிவிட்டேன்
இன்றும்
கூறினாள்
நான் தான்
தவற விட்டுவிட்டேன்
அன்றொரு நாள்
அவளுக்கு பாராட்டு விழா
என்று எங்கள் குழந்தை
நானும் அவளும்
என்று சென்றிருந்தோம்
விழாவின் உணவு நேரத்தில்
ஒருத்தி என் மனைவியின் (உன் அம்மாவின்)
அருகில் வந்து
உங்களை எனக்கு
மிகவும் பிடிக்கும் அம்மா
உங்களை ஒரு தடவை
அணைத்துக்கொள்ளட்டுமா
என்று வினவ
பாசமுள்ள
என் மனைவி
அவளை கட்டி அணைத்துக்கொண்டாள்
அணைத்த மறுநொடியே
(அணைத்த அந்த வேளை
நான் தூரத்தில்
இருந்து பார்த்தேன்
மலர்ந்த அவள் முகம் வாடவே இல்லை..
கண்கள் மட்டும்
மூன்று நான்கு முறை
மூடிமூடி திறந்தது.
அவள் உடல் அதிர்ந்தது.
ஆனால்
என்னவள்
அந்த பெண்ணை
அப்பொழுதும்
விலக்கவில்லை
மாறாக இறுக
அணைத்து
நன்றி என்றாள்)
என்னங்க (மாமா)
என்றே
கீழே சுருண்டு விழுந்தாள்...
பதறியடித்து
ஓடிச்சென்று
தூக்கி
மடியில் வைத்து பார்த்தால்
மார்பில் கத்தியால்
குத்துபட்டு
ரத்தத்தால் மூழ்கியிருந்தாள்
அவள் விரலோடு
என் விரலை
கோர்த்துக்கொண்டேன்
என்னை
அவள்
அழுத்தமாக
பிடித்துக்கொண்டு
என்னை எப்படியாவது
காப்பாற்றுங்கள் மாமா
நான் குழந்தையையும்
உங்களையும்
தனியே தவிக்க விட்டு போகமாட்டேன் மாமா.
மாமா உடனே
வாங்க மருத்துவமனைக்கு போகலாம்
என்று தைரியமாக
சொல்ல
வாடி போகலாம் என்று தூக்க முயல
அவளே என் தோளை பிடித்துக்கொண்டு
எழுந்து
என் கரம் பற்றி நடக்கலானாள்...
எல்லோரும்
அந்த பெண்ணை அடிக்க முற்பட
எல்லோரையும்
பார்த்தே சொன்னாள்
யாரும் அவளை அடிக்காதீர்கள்.
என் மீது உண்மையான
பாசம் வைத்துள்ளீர்கள்
எனில் அவளை யாரும்
அடிக்கக்கூடாது ,
திட்டக்கூடாது...
அந்த பெண்ணை
பார்த்து என்னவள்
சொன்னாள்...
இந்த பரிசை
எனக்கு தந்ததற்கு
மிக்க நன்றி அம்மா.....
என்னவளால்
நிற்க முடியவில்லை
என் சட்டையை பற்றியும் வலியில் வழுக்கி
எனை பிடித்துக்கொண்டே
என் பாதத்தில்
கீழே விழ முற்பட்டால்
நான் தாங்கி பிடித்து
அவளை தூக்கிக்கொண்டு
மகிழுந்துவில் ஏறி
சரியான நேரத்திற்கு
மருத்துவமனைக்கு அவளை தூக்கிச் சென்றேன்
மகிழுந்துவில்
ஒரு புறம் நீ
அழுதுகொண்டிருந்தாய்
நீ அழ அழ
என் மடியில் மயக்கத்திலிருந்த
உன் தாயின் உடல்
தூக்கி தூக்கி போட்டது(துடித்துக் கொண்டிருந்தது)
மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில்
அவளுக்கு
சிகிச்சை நடந்துகொண்டிருக்க
ரத்தம் நிறைய தேவைப்பட
என் ரத்தமும்
அவள் ரத்தமும்
ஒன்றே
எவ்வளவு வேண்டுமானாலும்
எடுத்துக்கொள்ளுங்கள்
அவள் என்னோடு சேர்ந்து
பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்
என்றேன்.
சிகிச்சை நல்லபடியாக முடிந்தது.
அம்மா மயக்கத்திலேயே
இருந்தாள்
அன்று தான்
விதி வசத்தால்
ஒருவேளை
முதன்முறையாக
ஆவின் பாலை தந்தேன்
உனக்கு
உன்னை தூக்கிக் கொண்டு
அம்மாவை பார்க்க
அறையின் உள்ளே
சென்றேன்
பேச்சு மூச்சின்றி
கிடந்தாள் அவள்
நான் அவளை
தொட்டதும்
தேகம் சிலிர்த்தாள்
அவள் நெற்றியில் முத்தமிட்டேன்
உன் குரல் கேட்டு
கண் திறந்தாள்
அவள் தூங்க வேண்டுமென்று
நகர
வெடுக்கென கையை பிடித்துக்கொண்டாள்
எங்கே போகிறீர்கள்(போறீங்க)
இங்கேயே உட்காருங்கள்
குழந்தைக்கு பால் குடுத்தீங்களா
ம்ம்ம்
இல்ல நீ தூங்கணும் இல்ல.
நான் தூங்கறன்
அதுக்கு முன்னாடி
குழந்தைய
குடுங்க
நான் பால் குடுத்துட்றன்.
அவளால் எழுந்திருக்கவே முடியவில்லை
ஆனால் அவளிடமிருந்த
தைரியமா என்று தெரியவில்லை
எழுந்து உட்கார்ந்து
என்னிடம் இருந்து குழந்தையை வாங்கி
பால் தந்து கொண்டிருக்க
நீங்க எதுக்கு வெளிய போனோம்
அதான் இந்த அறை இருக்கே
இங்கயே சோபால
தூங்குங்க.
ரொம்ப கலச்சிபோய்டீங்க.
உடனே
என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை
அவளை கட்டிக்கொண்டு
அழுதேன்.
கண்ணீரை துடைத்திட்டு
அவள் எனக்கு ஒன்றும்
இல்லை.என்று கூறிக்கொண்டே
மயங்கினாள்
நீ அவள் மார்பில்
இடிக்க (வருட)
உடனே
அவள் விரைந்து எழுந்தாள்
அவளின் மன தைரியத்தாலும்
உன்னையும்
என்னையும்
தனியே தவிக்க விட்டு
செல்லக்கூடாது என்று
போக இருந்த உயிரை
மீட்டு கொண்டுவந்தாள்
எப்பொழுதோ ஒரு நாள்
தற்செயலாக அவள்
சொன்ன வார்த்தைகள்
நினைவுக்கு வருகிறது
அது என்னவென்றால்
உன்னைத் தவிர வேறு எந்த ஆணும் எனை தொடக்கூடாது.
என்னை தொட்டுத் தூக்கக்கூடாது
இறந்தாலும்,
எனக்கு மாலை கூட
நீயே தான்
போட வேண்டும்,
என்னை கழுவி
கோடி துணி போடுவதிலிருந்து
எல்லாவற்றையும்
(எனக்கு மஞ்சள் குங்குமம் இடுவது பூச்சூட்டுவது,கால் கட்டு போடுவது,நெற்றிக்காசு வைப்பது,என் தாலியை எடுத்து அதில் மஞ்சள் குங்குமம் வைத்து
கண்ணில் ஒற்றிவிட்டு
மீண்டும் என் மார்போடு உரசும் படி வைத்துவிடு மாமா...
எனை கட்டியணைத்து கடைசியாக ஒருதடவை
உச்சி முகர்ந்து கொட்டி அழுதுவிடு மாமா...
எதையும் மனசிலேயே பூட்டி வைத்துவிடாதே...)
நீயே செய்யவேண்டும்
நீ மாத்திரமே அங்கு என்னோடு இருக்க வேண்டும்
என்னை சுடுகாட்டிற்கு
நீயே தூக்கிச் செல்ல வேண்டும்
உன் கரங்களிலேயே ஏந்தி மாமா...
கொள்ளி போடுவதை
இருவரும் பார்த்துக்
கொள்ளுங்கள்.
மகன் எனை அணைத்து அழுதுகொண்டே இருப்பான்.
ஆறுதல் நீங்கள் தான் தரவேண்டும்.
மகனே
என் மார்பின்
மீது தான்
உன் முதலடி எடுத்து வைத்தாய்
சொல்ல முடியா
இடங்களில்
எல்லாம் சுகமான
வலி தந்து பிறந்தாய்
புனிதமான
அங்கத்தில்
என் உயிரின்
உணர்வை
உன் உணவோடு
வைத்த இறைவனுக்கு
நன்றி
நீ எனை தொட்டு தூக்கலாம்
அள்ளி எடுக்கலாம்
நீ என் உயிர் செல்லமே
அப்பொழுது என்னிடம்
உதை வாங்கப்போற
என்று கூறியதற்கு...
எப்பொழுதோ ஒரு நாள்
நடக்கப்போவதை
இப்பொழுது சொல்லி வைத்தேன் .
அதற்கு ஏன் இம்புட்டு கோவம்.
நடக்கும்போது நடக்கட்டும் என்று
ஆரத்தழுவி எனை
அமைதிபடுத்தினாள்...
எனை கட்டிக்கொண்டே
புன்னகைத்து
சொன்னாள்
அழும் பொழுது பார்த்து அழு மாமா
உன் நெஞ்சில் இருப்பது நான்.
நீ அழுதால் என்னால்
தாங்க இயலாது என்றே.
இன்று ஏனோ அது
நினைவுக்கு வந்து
கண்ணீரை வரவழைக்கிறது
எப்பொழுதும்
எனை கண்ணீர் சிந்தவிடாமல்
உடனே துடைத்துவிட்டு
தலையை கோதும் அவள்
இன்று என் மடியில்
தூங்கிக் கொண்டிருக்கிறாள்
எனை அழவிட மாட்டேன்
என்று சொன்னவள்
இன்று ஒட்டுமொத்தமாக அழவிட்டு இறந்தாளடா...
பாரடா
முல்லை பூ போலே இப்பொழுதும் அவள் வாடாமல் சிரித்திக்கொண்டே இருக்கிறாள் நமை பார்த்து
என்னை கூப்பிடுவது போல் உள்ளதடா
மகனே
அப்பா
அம்மா
என்ன சொன்னாங்க
நாம ரெண்டு பேருந்தானே
அவங்க உலகம்னு சொன்னாங்க
நாம நெறையா
சாதிச்சு அம்மாவுக்கு பேரு
வாங்கித் தரணும்பா...
நம்ம கூடவே
அம்மா எப்பயும் இருப்பாங்கப்பா....
அம்மா அம்மா
எவ்வளவு நேரமாம்மா
நானும்
என்ன தைரியமாவே
வெளிக்காட்டிக்கறது
அப்பா போலவே
என்னாலையும்
நீ இல்லாத உலகத்த ஏற்க முடியலம்மா
எங்ககிட்டயே திருப்பி வந்துடும்மா.....
உங்கிட்ட வந்துடுவோம்மா...
சாவு தானா வரணும்
நாமளா வாழ்க்கைய
முடிச்சிக்கக் கூடாது
வாழ்க்கைய வாழணும்
அதான் வாழ்க்கை
அப்படினு நீ சொன்னது இல்லாம
அதே மாதிரியே வாழ்ந்து காமிச்சிட்ட
நாங்க
நீ இங்க
இல்லாம
நடை பிணமா
வாழ்றோம்மா
எழுந்திரும்மா
திருப்பியும்
நாம இன்னொரு
சென்மம் எடுப்போம்
அந்த சொர்க்கத்ல
அங்க நமக்கு பிரிவே இல்லம்மா.....
என்னவளே
என் உயிரை
எடுத்துக்கொண்டு போய்விட்டாயே
தேடலை தேடும் வாழ்க்கையில்
இருவரும்
உயிரையும் தேடுகின்றோம்
தேடல்
வெளிச்சம் உண்டாக்கும்
அந்த வெளிச்சம்
நம் வாழ்க்கையில் வரும்
என்றாய்
நாங்கள் தேடுகின்றோம்
பாதை இன்று இருளாய்
எங்கள் உள்ளத்தில் இருந்து
எங்களை வழிநடத்தடி
வழிநடத்துகிறேன் மாமா
என் செல்வமே
உங்களோடே தான்
இருக்கிறேன்
வாங்கள் கைக்கோர்த்துக்கொண்டு முன்னேறலாம்
ஓய்வெடுக்காதீர்கள் இலக்கை அடையும் வரை
ஓய்வும் நிம்மதியும்
தென்றலின் தாலட்டில் நான் தருகிறேன்.
தாய்மடி உனக்கிருக்கு
என்றும் வைரமே
என்னிடம் யாவையும்
பகிர்ந்துக்கொள்.
அம்மா உனக்கு
நான் இருக்கிறேன்
எதுவாக இருந்தாலும்
சரியாக்கி விடலாம்.
நம்மால் முடிந்த உதவியை
மண்ணில் செய்வோம்
விதை இன்றே விதைத்திடுவோம்
கனி நாளை கிட்டட்டும்
எல்லோருக்கும்.
நாம் மட்டும் ஏறாமல்
எல்லோர் கையையும் பிடித்து ஏற்றுவோம்
உயிரே
எல்லா பிறவியிலும்
எனக்கு நீயே
உனக்கு நானே
நமக்கு நம் தங்கங்களே...
இல்லை என்றால்
இப்பிறவியுடன்
எங்கள் எல்லோரையும்
சொர்க்கத்திலேயே
சேர்ந்து வாழ விடு
இறையே
நெஞ்சில் சுமக்கிறேன்
அன்பே
உன் மடியில் கிடப்பேன்
நானே
என் மார்பில் சுமக்கிறேன்
வைரமே
உயிரை முடிக்கிறேன்
கண்ணிலே
இருவரும்
என் இரு கண்கள்
எப்பொழுதும் இணைந்தே
இருக்கும்
இணைத்தே பார்க்கும்
வலிகளை என்னிடம் தந்துவிடுங்கள்
வாழ்க்கையை மகிழ்ச்சியாக
நீங்கள் வாழுங்கள்
நானும் உங்களுடன் தான் இருக்கிறேன்
(உன் சுவாசத்தில்
உனக்குள்ளே செல்கிறேன்
உன் உதிரமாக
உன்னுடல் முழுக்க ஓடுகிறேன்
உன் இதயமாகி
துடிக்கிறேன்
உன் கண்ணீரில்
என்னை கொல்கிறேன்...
உன்னை சுற்றியே
என்றும் இருக்கிறேன்
உனக்குள்ளேயே இருக்கிறேன்
நீயாகவே இருக்கிறேன்
உயிர்களே.........)
மீண்டும்
மீண்டும்
என்றும்
எப்பொழுதும்
காதல் செய்து
ஊடல் செய்து
நாம் வாழலாம்
கடவுளின் பாதங்களிலும்.....
தமிழே அமுதே.........
~ பிரபாவதி வீரமுத்து

