பெற்றோமா சுதந்திரம்

பெற்றோமா சுதந்திரம்?
நள்ளிரவில் வாங்கியதாலோ
என்னவோ?
இன்று நாம் நள்ளிரவில் பணிகள் செய்கிறோம்!
தென்மேற்க்கில் அரபிக்கடலால் நாடுகள் இனைந்தது அன்றெ;
வடகிழக்கில் நேபாளம் பிரிந்தது
இன்றே!
அகிம்சா வழி பின் பற்றியதாலோ
என்னவோ?
இன்னும் அடி பணிந்து
இருக்கின்றோம்!
வடக்கே இமயம் தடுத்தது
அன்றோ!
தெற்கே மீனவர்களை பிடித்தது
இன்றோ!
காந்தி படம் இருப்பதாலோ
என்னவோ?
காந்தி படம் அச்சடித்த தாளை வாங்க அவர் அனுபவித்த துயரங்களை அடைகின்றோம்!
தென்கிழக்கில் வங்கக்கடல் விரிந்தது
அன்றே;
வடமேற்கில் வங்கிக்கடன் விரிந்தது
இன்றே!
நாடுகளுக்கிடயே குரோதம் உண்டானதாலோ
என்னவோ?
இந்தியா ஆனது பாரதம்!
'ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்'
போல
"பாரதத்தாய் நம்மை பெற்றக்காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விட நற்பண்பு நிறைந்தவர்கள் என பிறர்ச்சொல்லக் கேளும்போது பெரிதும் மகிழ்வாள்"
புரட்சி வேண்டுகிறதோ அரசாட்சியில்
என்னும்;
எண்ணம் தோன்றுகிறதே மனசாட்சியில்!
விழித்திரு இளைஞா!
மாறியதோ சுதந்திரம்?
இனி
மாற்றுவோமே சரித்திரம்!