அங்கீகாரம் கிடைக்கட்டும்

நாளை சுதந்திரம்
இன்றோ
உயிரே போனது

மாற்றம்
என்ற வார்த்தை தவிர
யாவும் மாறும்

மனிதன்
இன்று
இதை பற்றி பேசுவான்
நாளை வேறு ஒன்றை பற்றி பேசுவான்

ஆனால் எதற்கும்
அதன் அடிவரை சென்று
ஆழம் காண மாட்டான்

காலம் மாறும்
காட்சி மாறும்
பட்ட காயம் மாறாது

ஒன்றை இங்கே
பதிவு செய்கிறேன்

விவசாயிகளை
அலட்சிக்காதீர்
அவர்கள்
என்ன அப்படி
சாதித்துவிட்டார்கள்
என்று எள்ளி நகைக்காதீர்

மூட்டைக் கட்டி
காசு தந்தால்
வாரி கொண்டு போகலாம்
ஆனால் அதை
உன்னால் செழித்து பயிரிட்டு
வளரச் செய்ய முடியுமா

தண்ணீர் இல்லாமல் காயும்
அதற்கு வழி தேட வேண்டும்
மழையில் நனையும்
அதற்கு தீர்வு காண வேண்டும்

உலகிற்கே சோறு போடும்
விவசாயிகளுக்கு
விடியல் கிடைக்கட்டும்

விவசாயிகளையும்
விவசாயத்தையும்
அலட்சியம் செய்யாதீர்...

நம்மிடம் காசிருக்கும்
ஆனால் உண்ண உணவிருக்காது
விளை நிலமும் விவசாயியும்
இல்லை என்றால்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (15-Aug-16, 6:37 am)
பார்வை : 130

மேலே