காதலை தேடி-14

காதலை(லே) தேடி-14

உடலால் உன்னை தீண்ட
நான் உன்னை நெருங்கவில்லை
என் காதலியே,
என் மனதால் உன்னை
ஏந்தி கொள்ளவே இந்த நெருக்கமெல்லாம்........

உன்னை நேசிக்கிறேன்
என்று ஒரு வார்த்தையில்
நான் கூறிவிட ஆசைப்பட்டால்
உன்னை உயிராய் நினைத்த
என் காதல் இதயம் என்னை
தண்டிக்க நேரிடும்.......

பூக்களை கட்டிக்கொண்டு எப்படி
குடும்பம் நடத்துகிறாய்?
இன்றைய ஹாட் நியூஸ் இது தான்.....
உன்னை மணந்ததிலிருந்து
யாரை பார்த்தாலும் இதே கேள்வி தான்......


அப்பாவும், அம்மாவும் கோவிலுக்கு செல்வதை பற்றி சொன்னதும் நல்ல விஷயம் தானே என்று நினைத்தவள் அவர்கள் இல்லாமல் இரண்டு நாட்களை தனிமையில் என்னுடன் செலவிட வேண்டுமே என்று நினைத்ததும் கதிகலங்கி சாக்கலேட்டை திருட்டுத்தனமாக சுவைத்துவிட்டு அம்மாவிடம் மாட்டிக்கொண்ட குழந்தைபோல அப்பாவியாக என்னை பார்த்த பார்வை இருக்கிறதே, அப்படியே என் சகியை கட்டி அணைத்து அவள் நெற்றியில் காதலோடு ஒரு முத்தத்தை பதிக்க வேண்டும்போல் இருந்தது.......எதையும் அப்போதைக்கு செய்ய முடியாத சூழ்நிலையால் அத்தனை உணர்வுகளையும் அடக்கிக்கொண்ட என்னால் சிரிப்பை மட்டும் அடக்கவே முடியவில்லை......

"எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க?"


"புலிகிட்ட சிக்கின மான் மாதிரி பீல் பண்ற மாதிரி தெரியுதே!!!!அத நினைச்சி பார்த்தேன், சிரிப்பு வந்துடுச்சு......."

"..................."

"என்ன சகி யோசிக்கிற, நான் சொன்னது சரிதானே"

"இல்ல, இதுல யாரு புலி, யாரு மானுனு யோசிக்கிறேன்"

"இதுல என்ன சந்தேகம், உன் மாமன் தான் புலி, என்னோட இந்த மாமி தான் மான்"

இப்போ ஏண்டி முறைக்கற, அப்படியே உன் கண்ணுக்குள்ள ஒரு கரண்டி மாவை ஊத்தினா குழிப்பணியாரம் சுட்டரலாம் போல இருக்கே, அவ்ளோ அனல் பறக்குது.......

"நீங்க புலியும் இல்ல, நான் மானும் இல்ல, நான் சகி, நீங்க சாரதி அவ்ளோ தான்"

"என்னது, என்ன சொன்ன திரும்ப சொல்லு"

"நான் சகி, நீங்க சாஆஆ......"

"ஏய் ஏன் ஸ்டாப் பண்ணிட்ட முழுசா சொல்லு"

"அது வந்து, அது, ம்ம்ம்ம்ம்ம்ம்.....அத்தை கூப்பிடற மாதிரி இருக்கு, நான் கீழ அவங்களுக்கு ஹெல்ப் பண்ண போறேன் ..."

மேடம் வெக்கப்பட்டு கீழ ஓடறாங்களாம், காரணம் கேட்கலையே, முதல் முறையா என் பேர நேருக்கு நேரா என் கண்ணை பார்த்து சொல்லிருக்காங்க, அதுவும் அவளுக்கு தெரியாம தான்.......அதுக்கு தான் இந்த வெக்கம், ஓட்டம்லாம்....

இப்போ தப்பிச்சிட்டே, இன்னும் ரெண்டு நாள் இருக்குல்ல, அது போதுமே.... என் மனசு உன்கிட்ட எப்படி விழுந்ததோ அப்படி உன்னையும் என் காதலால் விழவைக்கறதுக்கு.......

"சகி என்ன பண்ற, அம்மாவும், அப்பாவும் கிளம்பிட்டாங்க, சீக்கிரம் எழுந்து குளிச்சிட்டு வா, அவங்கள வழியனுப்பி வைக்கணும்ல...."

"இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் தூங்கிக்கிறேனே, ப்ளீஸ்...."

"சகி அம்மாவும் அப்பாவும், இன்னைக்கு கோவிலுக்கு போக கிளம்பிட்டு இருக்காங்க, மறந்துட்டயா??"

நான் சொன்னது காதில் விழுந்ததும் பதறியடித்து படுக்கையிலிருந்து எழுந்தவள், வேகமாக கடிகாரத்தை ஒரு ஓரப்பார்வையால் வருடிவிட்டு குளியலறைக்குள் ஓடினாள்.......

"சகி இன்னும் என்ன பண்ற, மணி ஆச்சு, அவங்க கிளம்ப வேண்டாமா?? இப்படி பாத்ரூம்க்குள்ளயே குடி இருந்தா அவங்க கோவிலுக்கு போய்ட்டு வந்ததும் தான் நாம கீழ போக வேண்டியது இருக்கும்....."

"நான் குளிச்சிட்டேங்க......."

"அப்புறம் என்ன சீக்கிரம் வா, டைம் ஆகுதுல்ல"

"நீங்க கீழ போங்க, நான் வரேன்"

"நான் கீழ போனதுக்கப்புறம் திரும்ப ஒரு தூக்கம் போடலாம்னு பாக்கறயா, சீக்கிரம் வா சகி, டைம் வேற ஆகிட்டே இருக்கு, அம்மா நம்பள பத்தி என்ன நினைப்பாங்க?"

"ஹைய்யோ சொன்னா புரிஞ்சிக்கவே மாட்டிங்களா, நீங்க கீழ போனா தான் நான் பாத்ரூம் விட்டே வெளிய வர முடியும்"

"என் சகி லூசாயேது ஆகிட்டாளா, நான் கீழ போறதுக்கும் நீ வெளில வாரத்துக்கும் என்ன சம்மந்தம்"

"அட கடவுளே, இந்த மனுஷன் சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்கறாரே, வேற வழியே இல்ல சொல்லி தான் ஆகணும்.........ஏங்க அவசரத்துல நான் டிரஸ் எடுத்துட்டு வர மறந்துட்டேன்......நீங்க கீழ போனா தான் நான் பீரோல இருந்து டிரஸ் எடுக்க முடியும்"

ஓஹோ இது தான் சங்கதியா, சகி இன்னைக்கு நீ என்கிட்ட அவஸ்தபடணும்ங்கறது உன் விதி...........

"அதெல்லாம் போக முடியாது, அதான் டவல் இருக்கும்ல...அத வச்சி மேனேஜ் பண்ணிக்கிட்டு வெளிய வா......"

"நீங்க தான் லூசாக்கிட்டிங்க போல, என்னாலலாம் வெளிய வர முடியாது...நீங்க இப்போ கீழ போறிங்களா, இல்லையா???

"அதான் சொல்லிட்டேனே மை ஸ்வீட்ஹார்ட், வெளிய போக முடியாதுனு.........."

"ப்ளீஸ்ங்க, டைம் ஆகுதுள்ள, சீக்கிரம் போங்க, அப்போ தான் நானும் சீக்கிரம் ரெடி ஆக முடியும்"

"ஏய் நானும் ரெடி ஆகிட்டு தான் இருக்கேன், என்னால இப்போ போக முடியாதுப்பா, நானும் சீக்கிரம் ரெடியாகணும்ல"

"ஹையோ விளையாடாதீங்க, சீக்கிரம் போங்க........".சிணுங்கிக்கொண்டே என்னவளின் இந்த கெஞ்சல் எனக்கு உலகத்தில் உள்ள அத்தனை போதைக்குண்டான மயக்கத்தையும் மண்டைக்குள் ஏத்தியது"

இதற்க்கு மேலயும் என்னால் அவளை சீண்டி பார்க்க முடியவில்லை, அதுவும் இல்லாமல் இப்போதே எல்லா விளையாட்டையும் விளையாடிவிட்டால் இன்னும் இரண்டு நாட்கள் நான் போட்டுவைத்த பிளான் எல்லாம் பிளாப் ஆகிவிடுமே......

"சரி, சரி, நான் கீழ போறேன், நீ சீக்கிரமா ரெடி ஆகிட்டு கீழ வா"

"கோவிலுக்கு போறது அத்தையும் மாமாவும் தான், ஆனா இவரு என்னமோ என்ன ரெடி பண்றதுலயே குறியா இருக்காரு, லூசு மாமா"

"என்ன சகி? என்னமோ சொன்ன மாதிரி இருந்ததே"

"ஒன்னும் இல்லைங்க, சீக்கிரம் கிளம்பி வரேன்னு சொன்னேன், நீங்க சீக்கிரம் போங்க, டைம் ஆகுதுல்ல"

"ம்ம்ம், நான் போய்ட்டேன், நீ வரலாம்"

என் சகியோடு நான் ஆரம்பித்த விளையாட்டு எப்படியோ முதல் இன்னிங்க்சிலேயே பட்டையை கிளப்பி விட்டது.......

"அவன் வேலைலயே மூழ்கி இருப்பாமா, நீ தான் உன்னையும், அவனையும் கவனிச்சிக்கணும்,உங்களை தனியா விட்டுட்டு போக மனசே வரல, ஆனா என்ன பண்ண, அவனுக்கு எதோ முக்கியமான வேலை இருக்காம்.......அவனால வரமுடியாதுனு சொல்லிட்டான், சரி உன்னையாவது கூட்டிட்டு போகலாம்னு பாத்தா, அவனை தனியா விட்டுட்டு போனா திரும்பி வரும்போது அவன் உடம்புல தோல் மட்டும் தான் மிஞ்சும், வேலை வேலைனு அவனை கவனிச்சிக்கவே மாட்டான்........."
வருத்தத்தில் பேசிக்கொண்டிருந்த அம்மாவை எப்படி சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது என்று நான் யோசிக்கையிலேயே,

"அத்தை கவலைப்படாம போய்ட்டு வாங்க, நான் அவரை நல்லா பாத்துப்பேன்...வேணும்னா நீங்க வரும்போது குண்டுமாங்கா மாதிரி குண்டாக்கிடறேன், இப்போ நீங்க தைரியமா போங்க"

"யாரு இவ என்ன கவனிச்சிக்க போராலாமா, நல்ல கதையா இருக்கு, யாருக்கு யார் கேர்டேக்கெர்னே தெரியல, முருகா என்ன காப்பாத்துப்பா"

"டேய் சும்மா இருடா, உனக்கு எப்போ பாரு விளையாட்டு தான், ரெண்டு பேரும் கவனமா இருங்க, நாங்க கிளம்பறோம்"

அம்மாவும், அப்பாவும் பாய் சொல்லிவிட்டு கிளம்பியதும், கண்ணா லட்டு தின்ன ஆசையா??? மைண்ட் வாய்ஸ் மூளைக்குள் மணியடிக்க ஆரம்பித்து விட்டது.....

சகியே, என் சகியே.....
உன்னை அள்ளிக்கொள்ள வாரேன்......
இனியே இனியினியே
இதமாய் கடத்தி கொள்ள போறேன்......

மனசு இப்போவே டூயட் சாங் பாட ஆரம்பிச்சிடுச்சு, இனி என்ன எல்லாம் ஒரே கும்மாளம், குதூகலம் தான்.......

சகி உன் மாமன் வந்துட்டேன்..........

எழுதியவர் : இந்திராணி (15-Aug-16, 3:25 pm)
பார்வை : 456

மேலே