இனி ஒரு விதி செய்வோம்

உச்சந்தலை காய
ஒசரமான கம்பியில
ஒத்தக் கயிறு பூட்டி - அதில்
வெடவெடன்னு துணிகட்டி
விசுக்கின்னு ஏத்திவிட்ட கொடி
காத்தாடப் பறக்குதுன்னு
கணக்கு வாத்தியார் கொடுத்த மிட்டாய்
ஒருகடிக்குத் தாங்கலியே!

எட்டாப்பு புக்கில இருந்த
பேரெல்லாம் வரிசையாச் சொல்லி
பத்தாப்பு வாத்தியாரு
படபடன்னு பேசயில - எங்கெங்கோ
இடைவெளியில் கைதட்ட
நிறுத்தாம பேசி இன்னும் முடிக்கலயே

வருசத்துக்கு ரெண்டுவாட்டி
இப்படித்தான் எடுத்துக்கூட்டி
கொடுத்தாலும் முட்டாயி
கலரு இன்னும் மாறலயே

ஆத்தாளும் சொல்லிருக்கா
அவகூட படிக்கயில
இப்படித்தான் நடந்துருக்கான்

முட்டாயி குடுத்த ராசா - சுதந்திரம்
கிடைச்ச தென்ன லேசா
எட்டாத காரியமெல்லாம் செஞ்ச நாட்டுக்கு - இனி
ஒரு லட்டாவது கொடுங்களேன்…

எழுதியவர் : charlie kirubakaran (15-Aug-16, 5:29 pm)
பார்வை : 884

மேலே