தாயின் கண்ணீர்

கருவினில் உருவானேன் எனச்சொல்லி
கலந்தாயே கண்களையும்
ஆனந்தக் கண்ணீரால்

நித்த நித்தமுனை
நச்சரித்துக் கேட்ட
கதையெல்லாம் சொல்லி சொல்லி
களைத்திட்ட போதும் களித்தாயே
காகிதத்தில் நானிட்ட
கோட்டுக்கெல்லாம் ஒரு பெயரிட்டு
அழைத்தாயே

கண்ணில் அதிநீரிட்டு கண்
விழித்திருப்பேன் அருகில்
இல்லையென சொல்லி துடித்திட்டபோது
ஆகாரம் ஊட்டி அடுத்தும்
தூங்கவைத்த அக்காவை
உச்சிமுகர்ந்து வடித்து
வைத்ததும் உன் கண்ணீர்தான்

கலியாணம் எனச்சொல்லி
கைபிடிச்சு நீ வச்சபுள்ள
இனி தானா பார்த்துப்பா
தனியாத்தான் போயிருன்னு
சொன்னபோதும் உன் முந்தான
சேலையில நீ முழுசா
தொடச்சதும் கண்ணீருதான்
பொத்து பொத்துன்னு
பொட்டப்புள்ள பொறந்திருக்குன்னு
முதமுதலா உங்கிட்ட
சொல்லும்போதும்
அக்காவே பொறந்திருக்கா
பத்திரமா பார்த்துக்கோ
அப்படின்னு சொல்லிவிட்டு நீ
வடித்ததும் கண்ணீருதான்

என்வித்தில் உருவானாய் நீயே
எந்தையும் தாயுமாய்
உன்கண்ணில் நீர் வர இனிநான்
விடமாட்டேன்

என்றும் உன் கண்ணீர்
ஆனந்தக் கண்ணீராகவே
இருக்கும் என்ற
நம்பிக்கையில் நான்

எழுதியவர் : charlie கிருபாகரன் (15-Aug-16, 5:50 pm)
Tanglish : thaayin kanneer
பார்வை : 208

மேலே