மாறிய பாதை

இரவு பகல் அறியாது இலக்குதனை அடைய
நான் வகுத்த பாதையில் பயணித்த வேளையில்
அழகு கொஞ்சும் கண்களினால் தூது விட்டு
காதல் கொள்ள வைத்தாயே!

பத்துமாதம் சுமந்தவளை வைத்திருந்தேன் என் நெஞ்சிலே
அதில் பாதி இடம் கேட்டு வந்து பரிதவிக்க வைத்தாயே!
நெஞ்சமது சுகமான பாரமாகி போயினும்
உறுதி கொண்டேன் இருவரையும் இறுதி வரை சுமக்கவே

என்னை மாற்றி, என் இயல்பை மாற்றி
மீண்டும் மீண்டும் உன் நினைவு தந்தாயே
காதலாலே கசிந்துருகி உன் வயப்பட்டபோது
நெஞ்சமதில் புயலடிக்க செய்தாயே !

வாழ்வின் எல்லை வரை கை கோர்த்திருப்பாய்
என மனக்கோட்டை ஒன்று நான் கட்ட
அதை தகர்த்து எனை விலகி சென்றாயே
மனம் வெதும்பி நிலை குலைய வைத்தாயே

மீண்டு வர நான் நினைத்த போதும்
முழு மதி உந்தன் நினைவுகள்
காட்டாற்று வெள்ளமாய் கரை புரண்டு ஓடியே
கல்லறைக்குள் என்னை தள்ள பார்க்குதே

உதிரம் கசியும் நெஞ்சோடு விடுத்தேன்
உனக்கு வேண்டுகோள் ஒன்று
இனியாவது என் போன்ற நெஞ்சுக்கு
காயங்களை பரிசாக தராதே.

எழுதியவர் : ஜெயஸ்ரீ ஸ்ரீகண்டன் (16-Aug-16, 11:36 am)
Tanglish : maariya paathai
பார்வை : 913

மேலே