பொருத்தம் கவிதை

*
பத்து பொருத்தத்தில்
ஆறு பொருந்தி வந்தது
மீதி நான்கு பொருந்தி
வரவில்லையென்று
கணித்துக் கொடுத்தது
கம்ப்யூட்டர் ஜாதகம்.
ந.க.துறைவன்.
*
முப்பது ஜாதகப்
பொருத்தம் பார்த்தார்கள்
பொருந்தி வரவில்லை.
பொருத்தமானவனோடு
அவள் ஒருநாள்
பறந்து போய்விட்டாள்.
ந.க.துறைவன்.

எழுதியவர் : ந.க.துறைவன் (18-Aug-16, 6:38 am)
Tanglish : poruththam kavithai
பார்வை : 417

மேலே