உன் புன்னகை வேண்டும்

உன் ஸ்வாசம் தீண்டாது
இவ்விடத்தில்-தெரிந்துமே
நொடிக்கொருமுறை காற்றோடு
கதைப்பேசும் என் விழிகள்
உன்னை தேடாமல் ஓய்ந்தாலே
அதிசயம் தான்!!!!!
----------------------------------------------------
உன் அருகாமை மட்டுமே
யாசிக்கும் எனக்கு நீ
ஆயிரம் பரிசுகள் தந்தாலும்
உன் கரத்தை கட்டிப்பிடித்து
உன்னை என் காதல் சிறையில்
அடைப்பதே என் ஆசை!!!
-------------------------------------------------------
எங்கிருந்து வெட்கத்தை
எனக்காய் வாங்கி வந்தாய்......
உன்னை பார்க்கும்போது மட்டுமே
சிவக்கும் என் கன்னங்களை
கிள்ளி பார்க்கும் உன் கண்கள்
நான் கண்டிராத சொர்க்கம் தான்!!!!
--------------------------------------------------------------
நிலவை பிடித்து தரவா
வானை வளைத்து தரவா
கேட்கும் என் ஆருயிர் கள்வா
இது கூடவா உனக்கு தெரியாது????
என் கைவிரல் பிடித்து
என் கழுத்தினில் வளைந்து
உன் கரம் கொண்டு என் வகுட்டில்
குங்குமம் இட்டால் போதுமென்று!!!!
----------------------------------------------------------------
நீள் வானம் ஒன்றை பறித்துக்கொண்டு
வெண்ணிலவை அதில் முடிந்துகொண்டு
முடிவில்லா நிமிடங்களை விலைபேசி
உனக்காய் ஜென்மங்களாய் காத்திருக்கும்
என் காதல் தேசத்தை கண்டறிய
உனக்கு இத்தனை நாளா???
உன்னை சோம்பேறி என்றே
திட்ட தோன்றுகிறது செல்லமாக!!!!!
என் கற்பிற்கும் கட்டிலுக்கும்
மத்தியிலே விரல் நீட்டி
வாவென்று அழைக்கிறாய்!!!!
நான் போவென்று சொல்ல நினைக்க
என் மௌனமோ உன்னை
பந்தாக கட்டிக்கொண்டு என்
பக்கத்திலே இறைக்குது!!!
---------------------------------------------------------------
கண் சொக்கி என் மடிமீது
சிறுபிள்ளைபோல் நீ விழும்போதும்
உன் விரல்களுக்கு நெட்டிழுத்து
உன் கலைந்த முடி கோதிவிட்டு
நான் தொடங்கிய கதையை
தொடர்கதையாய் உன் காதோரம்
சொல்லி முடிக்கிறேன்........
நீ தூக்கத்திலேயே சிரிக்கிறாய்!!!!
--------------------------------------------------------------------
நீ வந்துவிட்டாய் அறிந்துகொண்டேன்
உன் மூச்சு காற்று மோதலில்.......
தெரியாததைப்போல் திரும்பி நின்று
நான் செய்யும் வேலையெல்லாம்
நீ என் பின்னால் வந்து
அணைத்து கொண்டு என் காதோரம்
இட்டு செல்லும் ஒற்றை முத்திற்காக தான்!!!!
----------------------------------------------------------------------
இத்தனை நாள் ஊசிக்காக பயந்து
அழுத குழந்தை நான்....
இன்று இன்னமொரு ஊசிக்காக
ஏங்கி நிற்பது எல்லாம் அப்பட்டமான
உண்மை தான்...........நீ என்னை
இறுக பற்றிக்கொண்டு ஆறுதலாய்
அருகில் நிற்கும் நிமிடங்களை
முழுமையாக ரசிக்கவே!!!
----------------------------------------------------------------------
இன்னுமின்னும் நீளும் எந்தன்
காதல் ஆசை சொல்வதென்றால்
இன்னுமின்னும் நீளும் உந்தன்
புன்னகைகள் வேண்டுமென்பேன்......
உன் காதலென்னும் சிறையினிலே
மீளா ஓர் ஜென்மம் போதுமென்பேன்!!!!!!
இத்தனைக்கும் முற்றுப்புள்ளி
இல்லை என்ற புரிதலிலே
முத்தம் கொண்டு யுத்தம் செய்வேன்
உன் இமைக்காத விழியினினுள்ளே!!!!!!
-------------------------------------------------------------------------