இன்றைய ஜனநாயகத்தின் நல்வினை

அநீதிகளை கண்டும்
அமைதி காப்பதே இன்றைய
சமுகத்தின் நல்வினை போலும்...!

ஆயுதங்களை ஏந்தி
அமைதியை சீர்குலைத்தும்,
அஹிம்சையை எதிர்ப்பதும்
நம் அன்றாட நல்வினை போலும்...!

இன்றைய இளைஞனுக்கு சுயநலத்தால்
இன்பம் பெறுவதே
இன்றியமையாத நல்வினை போலும்...!

ஈகையை மரித்தும்,
ஈன்றோரை மதியாமையும்
நம் நல்வினை போலும்...!

உண்மையை உணராமல்
உண்ணதத்தை அறியாமல்
உளமாற தீங்கிளைப்பதே நல்வினை போலும்...!

ஊனமுற்றவானாய், தவறினை கண்டும்
ஊமையானவனாய் வாழ்வதுமே
இன்றைய நல்வினை போலும்...!

எண்ணங்களில் உயர்வின்றியும் சமூக நலன்
எதிலும்
ஈடுபாடின்றியும் இருப்பதே நல்வினை போலும்...!

ஏழ்மையை அகற்றாமல் தான்
ஏகாந்தமாய் வாழவேண்டும் எனும்
சுயநலமே நல்வினை போலும்...!

ஐயமுற்றும்
ஐந்தறிவு உள்ள மிருகமாய் வாழ்வதுமே
இன்றைய சமூகத்தின் நல்வினை போலும்...!

ஒருநாளும் ஒரு பொழுதும்
ஒருவருக்கும்
பயனற்று வாழ்வதே நல்வினை போலும்...!

ஓர் நாள்
ஓர்முறையேனும் நம் குறை காணமால்
பிறரை இகழ்ந்து உரைப்பதே நல்வினை போலும்...!



காட்சிகள் எல்லாம் நன்மையானதும் அல்ல,,,!
சாட்சிகள் எல்லாம் உண்மையானதும் அல்ல...!
மனசாட்சிகள் எல்லாம் உன்னதமற்றதும் அல்ல...!
இனியேனும் இதை உணர்ந்து,
ஒற்றுமையோடு வாழ்ந்து
நாடு போற்றும் நல்வினை புரிவோமாக..!!!

எழுதியவர் : நரேந்திரன் AS (21-Aug-16, 7:06 pm)
பார்வை : 112

மேலே