தீவிரவாதமே போ அமைதியே வா
தீவிரவாதமே அகிம்சையை சுவாசித்து பார்
நீ வெளியிடும் மூச்சில் அமைதியை அறிவாய்
பொன் வைக்கும் இடத்தில்-பெண் வைத்துப்பார்
தீவிரவாதத்தை சுட்டெரித்து தீபம் ஏற்றிப்பார்
அமைதியின் அழு குரல் - உன் செவியை பிளக்கும்
ஒரு வேளை உன் குருதியின் நிறம்
நீ அறியவில்லையோ- என்னவோ
உன்னால் சிதைக்கப்பட்ட சிற்பிகளின் குருதியை உற்றுப்பார்
வெண்மையை உணர்வாய் கூடவே வெறுமையும் அறிவாய்
அண்ணல் நடந்த பாதையில் அகிம்சை
தூவ மறந்து தீவிரவாதத்தை தூவி
அமைதியை அடியோடு பிடுங்கிய கையில்
எத்தனை எத்தனை பிஞ்சு தலைகள், கரங்கள்
சிதறிய சதைகள் - அதில் வழிந்தோடும்
குருதிகள் அது மட்டும் ஏன் விட்டு வைக்கிறீர் - அதையும்
குடித்து பாருங்கள் தாகம் தணிகிறதா - தணியாது
தணித்து நிற்கும் தனிமையை துணைக்கு
அளிக்கும் தீவிரவாதமே -உன்னுடைய
அலறலில் அமைதியின் ஓசையை
அரங்கேற்ற முடியுமா -முடிந்தால் மட்டுமே
அமைதிக்கு முடி சூட்ட முடியும்

