இலை

இலை
உலகிற்கு பசுமை யிலை,
கண்களுக்கு குளிர்ச்சி யிலை,
நமக்கு சுவாச மிலை,
கனிகளுக்கு ஆதர விலை,
பூக்களுக்கு ஆதார மிலை,
தாவரத்திற்கு ஒளிச்சேர்க்கை யிலை,
சைவ உணவு மிலை,
இயற்கை குடையு மிலை,
குளிர்ந்த நிழலு மிலை,
மண்ணுக்கு வளமை யிலை,
மண்ணுக்கு நிலைத்தன்மை யிலை,
மரத்திற்கு முழுமை யிலை!!!!
****************************
இலையே?
நீ மழையோடு,
என்ன பேசுவாய் ?
எப்படி பேசுவாய்?

கைகளை அசைத்து
அசைத்து பேசுவாயோ?
தொட்டு முத்தமிட்டு
பேசுவாயோ ?

மழையின் காதலையும்
என்னென்று சொல்வேன் ?

மழை அன்பை கூடைகூடையாய் கொட்ட,
நீ மெய்சிலிர்த்து நனைந்து நிற்க,
உன்னை தீண்டாத துளிகளோ,
வேரினுடே உட்புகுந்து,
நரம்பு மண்டலத்திலும் நுழைந்து,
உன்னையே காதலால் கொல்லுது,
மொத்தத்தில் மழையே வெல்லுது!!!

உட்புகுந்த நீர்,
நெருப்பு தேவனை கேட்குது,
எம் காதலுக்கு பலனாய்
கனிகளை தாவென?
அவனும் அருளினான்,
உலகின் மேன்மைக்காய்

மழைக்கு இலையின் பரிசாய்!!!!

எழுதியவர் : நவீன் குமார் இரா (23-Aug-16, 7:48 am)
Tanglish : illlai
பார்வை : 181

மேலே