தங்கைக்கு

என் எச்சில் பால் என சொல்லவில்லை - எனில்
அன்னை மடியில் நான் இருந்ததாய் எனக்கு நினைவே இல்லை...
உனக்கே கடாக்ஷம்.... உன் பெயர் போல...

நான் கண்ட பிரிவின் வேதனையை - உன்
கண்ணறியாமல் வளர்க்க நினைத்ததோ....
என் அன்பறியாமல் என்னை எதிர்த்து நீ...

நான் கிள்ளி வைத்த தங்கை
என்னை தள்ளிவைத்தால்...
அன்று நீ சிரிக்க, நான் அழுதேன் - இன்னும்
அழுது கொண்டிருக்கிறேன், உன் குழந்தை முகம் மலர...

அத்தை வீட்டிலே அரை ஜாமத்தில் - நீ
அலறி அழுத போது, அப்பனும் இல்லை அம்மையும் இல்லை...
அந்த இரவில் நீ தூங்க உன்னை காத்திருந்தேன்
அனைத்துமாய்....

நாட்கள் செல்ல - உன்
நாவில் சரஸ்வதி செல்ல,
நான் உன்னை விலகி செல்ல...
நீ என் செல்ல செல்ல(தங்கை - தெலுங்கில்)
என்பதை சொல்லாமல் போனேன்....

மாதங்கள் கடந்து போக...
மணியம்மா - மகா அம்மாவாக,
மனதாலும் நான் மறுத்து போக
மீண்டும் உன்னை பிரிந்து போக
என்னை தனிமைப்படுத்தினேன் ....

வருடங்கள் ஓடி வர,
வளர்த்தவள் மேல் பாசம் வர,
வலிகொண்ட மார்பினுள்
தொப்புள் கோடி சொந்தமெல்லாம்
தொலைதூர புள்ளியானது....

போலி அன்பு காட்டும் கோடி உறவிலும்,
உரிமையோடு சண்டை போடும் உன்னை
தொலைக்கிறேன்- செய்வதறியாதவிக்கிறேன்.

எழுதியவர் : மணிகண்டன் (23-Aug-16, 12:45 pm)
Tanglish : thangaiku
பார்வை : 2381

மேலே