அறுந்ததால் சேர்ந்தோம்

ஒற்றைச் சாரல் பட்டுத்தெறிக்க தன் அழுக்கை கழந்து அதன் அழகியலை படுகொலை செய்த சந்தோஷத்துடன் பல்லைக் காட்டி இழிப்பது போல் பிழந்து நிற்கும் கம்பியை பிடித்தவாரு ஒரு பேருந்து பயணத்துடன் தன் நாளை துவங்கினால் தேனிதல்
அதிவேகம் ஆபத்தானதால் அறுந்து போன தன் மெல்லிய காலணியை சற்று கிள்ளியவாரு எடுத்து அறுவை சிகிச்சை செய்து பார்த்தும் பயனில்லை.
தன் காலணிக்கு ஒரு கை தேர்ந்த மருத்துவச்சி தேவை என்பதை புரிந்துகொண்டு தேடி அலைந்தாள். சற்று தொலைவில் ஒரு குறுகிய வளைவில் கூண் விழுந்த கிழவி நெடுஞ்சாலையில் நடந்து அறுந்து போன வயதான காலணிக்கு தன் மருத்துவத்தை முயற்ச்சிப்பதைக் கண்டு அமாவாசை போன்ற சாலையில் தன் பௌர்ணமி பாதம் பட நடந்து செல்கிறாள்.
மருத்துவம் முடிந்த பின் தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினாள் தேனிதல்.
எங்கிட்ட 500 ரூவாக்கு சில்லர இல்ல கண்ணு. நீ நாளைக்கு இந்த வழியா வந்த குடுத்துட்டு போ என்று சொல்லியவாரு சம்பாதித்துக் கொண்டாள் ஒரு பேத்தியை.
நாட்கள் கடந்தது, மீண்டும் ஒரு முறை மருத்துவச்சியை சந்திக்கும் நேரம் வந்த்தது. ஏற்கனவே கொடுக்க வேண்டிய மருத்துவ செலவை மறந்துவிட்டு தற்போதைய கட்டணத்தை மட்டும் கொடுக்கிறாள். புன்னகையுடன் வாங்கி தன் சுறுக்குப்பையில் போட்டுக் கொண்டு செருப்ப அடிக்கடி தண்ணில போடாத கண்ணு என்று அறிவுரை கூறி அனுப்பினாள் கிழவி.
சற்று தூரம் கடந்து வந்தபின் நியாபகம் வருகிறது தான் கொடுக்க வேண்டிய பழைய பாக்கி. திரும்பி சென்று நீங்கள் ஏன் பழைய பாக்கியை கேக்கவில்லை என்று கேட்கிறாள்.
நாலு பேரு நின்னுட்டு இருக்கும் போது பழைய பாக்கி எங்கனு கேட்டா உனக்கு அவமானமா போய்ரும்ல கண்ணு, அதனால தான் கேக்கல என்று பொன் சிரிப்புடன் பாசத்தோடு பேசிய கிழவியின் வார்த்தைகள் அவளை பழைய நிகழ்வை நோக்கி அழைத்துச் சென்றது.
“ தான் கார்த்திக்கு கொடுத்த 1000 ரூபாயை சக வேலையாட்கள் முன்னால் கேட்டு அசிங்க படுத்தியதால் ஒரு நல்ல மனிதனை தன் நட்பு வட்டத்தில் இருந்து இழந்ததை நினைத்து வேதனையடைகிறாள்”
உடனே தன் கை பேசியை எடுத்து கார்த்திக்கு call செய்கிறாள். மன்னிக்குறவன் மனுசன், மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுசன் என்ற dialer tune கேட்டவுடன் call cut செய்து விட்டு I am sorry என்று message தட்டி விடுகிறாள்.
உடனே கார்த்திக் கால் செய்து நான் தான் மன்னிப்பு கேக்க வேண்டும்.i am sorry எங்கிறான்.
ஒரு messageல் மனுசியாகவும், பெரிய மனுசியாகவும் தான் மாரியதாய் நினைத்துக் கொண்டு கார்த்தியின் நட்பை புதுப்பித்துக் கொண்டாள்.

எழுதியவர் : அருண்குமார் (23-Aug-16, 11:53 pm)
சேர்த்தது : அருண்குமார்
பார்வை : 227

மேலே