ஒரு போராளியின் காதலும் கண்ணீரும் கலந்த சரித்திரம் பாகம்-1

"அம்மா அம்மா காலை ஒரு மணி ஆகிவிட்டது எழுப்பவில்லையா?"
என குரல் கொடுத்த சமையல்காரியின் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டாள் தூயவள். அப்போது தான் ஞாபகம் வந்தது அவளுக்கு!

அவசர அவசரமாக எழுந்து தனது பத்து வயது அன்பு மகள் தமிழ்நிலாவை எழுப்பினாள்.
"தமிழ் தமிழ் எழும்பி வெளிக்கிடுங்கோ..." என்று அவசர தொனியில் கூறினாள் தூயவள்.
. "என்னம்மா தூக்கம் வருகுது..."என்று கூறியபடி தன் அன்னையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு எழுந்து சென்றாள் தமிழ்.
இருவரும் ஆயத்தமாகி விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தனர். வீட்டு வேலைக்காரன் அவர்களின் சூட்கேஸ் இரண்டையும் மூன்று சாமான்கள் அடங்கிய பெட்டிகளையும் வாகனத்திலிருந்து இறக்கி விமான நிலையத்துக்குள் கொண்டு வந்து வைத்து இவர்கள் இருவரையும் வழியனுப்பி வைப்பதற்காக நின்றான்.

இலங்கை விமானம் சிறிது நேரத்தில் செல்ல இருக்கிறது.என்பதை ஆங்கிலத்தில் அறிவிக்கப்பட்டது.ஆங்கில மொழியில் பாடங்களை படித்தாலும் தமிழ் மொழியில் தான் கதைக்க வேண்டும் என்பது தூயவளின் அன்பு கட்டளை.அதனால் தமிழால் மட்டுமே கதைப்பாள் தமிழ் நிலா.

அறிவிப்பைக் கேட்டு இருவரும் வரிசையாக நின்று பரிசோதனைகளை முடித்துக்குக் கொண்டு விமானத்திற்குள் அமர்ந்து கொண்டனர். தமிழுக்கு இது தான் முதல் தடவை விமானத்தில் பயணிப்பது; அவளுக்கு மனதுக்குள் பயம் இருந்தாலும் தன் அன்னையுடன் இருப்பதால் மிகவும் சந்தோசமாக காணப்பட்டாள்.

ஆனால் தூயவளுக்கு விமானத்தில் செல்வது இது இரண்டாவது முறை அவள் சாதாரணமாக இருந்தாள்.ஆனால் ஒன்பது வருடங்களுக்கு பின்னர் தன் தாய்நாட்டுக்கு செல்கிறாள் விமானத்தில். ....


தமிழ் இடைக்கிடையே சில கேள்விகளை கேட்டு கொண்டு இருந்தாள். சில நிமிடங்களின் பின் விமானம் புறப்பபட்டது.தமிழும் சிறிது நேரத்தின் பின் உறங்கி விட்டாள்.

தூயவள் சிந்தனையில் உறைந்தாள்.
ஆம் அது அவளது கடந்த காலம் அவள் நினைவில் வந்தது.
மீன் பாடும் தேன் நாடாம் மட்டக்களப்பில் பச்சைப்பசேலென அழகாகக் காட்சியளித்து அனைவரது உள்ளத்தையும் கவரக்கூடிய வகையில் நெற்பயிர்களை கொண்டு காணப்படும் சிறு கிராமத்திலே பிறந்தவள் தூயவள்.

இவளின் அன்னை வைத்த பெயர் வினோதினி. அனைவரும் வினோ என்றே அழைப்பார்கள்.தன் ஐந்து வயதிலேயே தனது அன்பு தாய்,தந்தையை ஒரு வாகன விபத்தொன்றில் இழந்து தன் தங்கை நிலாவுடன் தனிமரமாகினாள். அவள் தங்கைக்கு வயதோ இரண்டு.என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அவளுக்கு அவள் ஆதரவு கொடுக்க அவள் அத்தை முன் வந்தாள்...

அவளுடைய வீட்டிலேயே அவள் அத்தை குடும்பம் வந்து குடியிருந்தனர். இப்படியே மூன்று வருடங்கள் முடிந்து விட்டது.தற்போது அவளுக்கு எட்டு வயது கொஞ்சம் வளர்ந்து விட்டாள். ஆனால் தன் அத்தையின் உண்மையான குணம் சில நாட்களில் வெளி வந்தது.

தாய் அன்பு என்ன என்பதை அறியாமலே அத்தையின் அதட்டல் வெருட்டல்களுக்கு பயந்து வாழவேண்டிய நிர்ப்பந்தம்.............
தொடரும்........

எழுதியவர் : சி.பிருந்தா (24-Aug-16, 12:16 am)
சேர்த்தது : சிறோஜன் பிருந்தா
பார்வை : 210

மேலே